இணையும் நேரமும் அடையாளமும் 63-08-18 1 மாலை வணக்கம். இன்றிரவு இந்த இடத்தில் இங்கு வந்தி நிற்பது சிலாக்கியமானதாயுள்ளது. 2 நான் இக்காலை சாலையில் வந்துகொண்டிருந்தபோது...நான் ஜெபித்துக் கொண்டும், கர்த்தர் பேரில் காத்துக் கொண்டிருந்தேன். சாலையில் வந்து கொண்டிருந்தபோது, நான் ஒரு-ஒரு வானொலியைத் திருப்பி கறுப்பு நிற சகோதரன் ஸ்மித் அவர்கள் பேசுவதைக் கேட்டேன். (இன்று காலை நீங்கள் எல்லோரும் அவர் பேசுவதைக் கேட்டீர்களா? உங்களில் எவரேனும் கேட்டீர்களா?) அது ஒஹையோ வானொலி நிலையத்தில் ஒலிபரப்பப்பட்டது என்று நான் நினைக்கிறேன். அவர் பிரசங்கிப்பதைக் குறித்து யாரோ ஒருவர் என்னிடத்தில் சொல்லிக் கொண்டிருந்தார், அதாவது, "அந்த விதமாக அவர் பிரசங்கிப்பதை நீர் வானொலியைத் திருப்பிக் கேட்க வேண்டும்” என்றார். 3 இன்று காலை அவர் பேசுவதை நான் கேட்க நேர்ந்தது. இன்றைக்கு உலகில் பாவம் எவ்வளவு பெருகிக் கொண்டிருக்கிறது என்பதை அவர் நிச்சயமாகவே சொல்லிக் கொண்டிருந்தார், அவர்... நான் அதற்கு சற்று தூரமுள்ள வானொலி நிலைய ஒளிபரப்பிற்குத் திருப்பி, வரும்போதே மற்றொருவர் பேசுவதையும் கேட்டேன். நான் இந்தக் காலை உள்ளே நுழைந்தபோது, நான் இங்கு வந்தடைந்த நேரமோ, ஆயத்தமாகி சபைக்கு வரக் கிட்டத்தட்ட மிகவும் காலதாமதமாகிவிட்டது. ஆகையால் இன்றிரவு கர்த்தருடைய ஆராதனையில் சேவிக்கும்படியாக நாம் இங்கிருக்க உண்மையாக மிகவும் சிலாக்கியமடைந்துள்ளோம். 4 சகோதரன் நெவிலைக் குறித்துப் பேசும்போது, அண்மையில் நம்மை விட்டுப் பிரிந்து சென்றுவிட்ட நம்முடைய சகோதரியைக் குறித்து அன்றொரு நாள் அளித்த செய்தியை அறிவோம். அது யாரென்பதையும் நாம் எல்லோரும் அறிவோம், அது சகோதரி வீவர் அவர்களாகும். இன்றிரவு ஞானஸ்நானம் பெற இங்குள்ள ஒரு மனிதனைக் குறித்து எண்ணிப்பார்க்கிறேன்; அவள்...நான் அவளுக்கு இந்த ஞானஸ்நானத் தொட்டியில் ஞானஸ்நானங் கொடுத்தேன்...நான்...அவர்களோ அவளை ஒரு சக்கர நாற்காலியில் இங்கு கொண்டுவர வேண்டியதாயிருந்தது. அவள் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருந்தாள், அவள் அன்றிரவு மாத்திரமே உயிரோடிருக்க வேண்டியவளாயிருந்தாள்; மருத்துவர்களோ அவளைக் கைவிட்டிருந்தனர், அவள் அடுத்த நாள் காலை மரிக்கப் போவதாயிருந்தாள். நான் அவளுடைய வீட்டிற்குச் சென்று, தெய்வீக சுகமளித்தலைக் குறித்து அவளிடத்தில் பேச முயன்றபோது, அவளோ, "நீர் என் வீட்டிற்கு வர நான் - நான் பாத்திரன் அல்ல" என்றாள். மேலும் அவள், "நான் ஒரு பாவி” என்றும் கூறினாள். ஆனால் அவள், "ஐயா, நான் இதைப் போன்ற பாவியான நிலையில் மரிக்க விரும்பவில்லை” என்றாள். எனவே இங்குள்ள கிரேஸ் வெப்பர் என்னை அங்கு அழைத்துச் சென்றாள். நான் அப்பொழுதுதான் கூட்டங்களிலிருந்து களைப்புற்று வந்திருந்தேன். நான் அங்கு அவளுக்காக ஜெபித்து, வேதத்தை அவளுக்கு வாசித்துக் காண்பித்த போது, அவள் இரட்சிக்கப்பட்டாள். அவளால் அப்பொழுது தன்னுடைய கரத்தைக் கூட உயர்த்த முடியாமலிருந்தது, ஆனால் அவள் ஒவ்வொருவரோடும் கரங்களைக் குலுக்க விரும்பினாள். அவள் அப்படியே.. அவளுக்கு ஏதோக் காரியம் சம்பவித்திருந்தது. 5 அவர்கள் கரங்களைக் குலுக்கிக் கொண்டிருந்தபோது, அவள் கோழி இறைச்சி விற்கும் இடத்திற்கு சென்று திரும்பி வருவதாக ஒரு தரிசனம் கண்டேன். நான், "சரி, இப்பொழுது சரியாகிவிடும்" என்றேன். அது பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது. அவள் அதிலிருந்து புற்று நோயினால் பாதிக்கப்படாமலிருந்து வந்தாள். அவள் மரித்தபோது... புற்று நோயினால் ஒருபோதும் மரிக்கவில்லை, அவளுக்கு ஒரு மாரடைப்பு ஏற்பட்டு, அதுவே அவளைக் கொன்று போட்டது. அவர்கள் அவளுக்கு பிராண வாயுவினைச் செலுத்தினர்; அவள் ஒரு மாரடைப்பில் மரித்துப் போனாள். 6 கடைசியில் ஜனங்கள் அவள் வீட்டை விட்டு சென்று கொண்டிருந்தபோது, அப்பொழுது இயேசு வந்தார் என்று அவர்கள் பாடினதைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். சரியாக அதுதான் அப்பொழுது சம்பவித்தது, அவர் வந்து, அவளுடைய ஜீவனை அந்த பதினெட்டு ஆண்டுகளாக காத்தார். அது எவ்வளவு பொருத்தமானது என்று நான் எண்ணினேன். அந்த ஸ்திரீ அந்தவிதமாக அதைப் பாடிக் கொண்டிருந்ததை அநேகமாக உணராமலிருந்திருக்கலாம், அதன் பின்னர் அவள் அதை உணர்ந்திருக்கலாம். ஆனால் அப்பொழுது இயேசு வந்தார் என்னும் பாகம் அங்கு எவ்வளவு பொருத்தமானதாயிருக்க வேண்டியதாயிருக்கிறது. 7 இப்பொழுது என்னுடைய பெரிய கூட்டங்களுக்கு சற்று முன்னர் எனக்கு - எனக்கு உண்மையாகவே சற்று பதட்டம் உண்டாகிறது. இந்தக் காலை நான் மிகவும் கலக்கமடைந்து, பின்னர், நான் ஜெபிக்கச் சென்றேன். பின்னர் நான் நான் இங்கு மீண்டும் வீடு திரும்பினேன். குடும்பத்தினரையோ அரிசோனாவிற்கு கொண்டு சென்றேன். நான் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். நான் சற்று ஒரு விதமாக இளைப்பாற இங்கு திரும்பி வந்தேன். வரப்போகும் இந்தவாரத்தில் சகோதரன் உட் அவர்களோடும், இங்குள்ள ஒரு கூட்ட சகோதரர்களோடும் வேட்டைக்கு செல்லப் போகிறேன். நாங்கள் கெண்டக்கிக்குச் செல்லப் போகிறோம். நான்... திருமதி.வீவர் மரித்த அன்றைய தினம் வர நேரந்தது. எனவே அந்த அடக்கத்தில் என்னால் சகோதரன் நெவிலுக்கு உதவியாக இங்கே இருக்க முடிந்தது. 8 ஜனங்கள் குறை கூறிக் கொண்டிருப்பதைக் குறித்து நான் அதிகம் கூற முயற்சிக்கவில்லை... நான் முயற்சிக்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். காரணம் ஒரு ஒரு மனிதன் அல்லது ஒரு ஸ்திரி தொடர்ந்து குறை கூறிக் கொண்டிருப்பதைக் காண்பது பயங்கரமான காரியங்களில் ஒன்று என்று நான் எண்ணுகிறேன். நான் எப்பொழுதுமே, “தேவனே, அதிலிருந்து என்னை விலக்கிக் காத்துக் கொள்ளும்” என்று எண்ணுவதுண்டு. பாருங்கள், அதுஅது எல்லா நேரத்திலும் விசுவாசத்தைப் பலவீனப்படுத்துகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் வெறுமென - நீங்கள் வெறுமென... நீங்கள் - நீங்கள்.. அவர்களுக்கு வயதாகும்போது, நம் ஒவ்வொருவருக்குமே, சம்பவிக்கிற ஏதோ ஒன்றை, சம்பவிக்கிற ஏதோ ஒன்றை நாம் பெற்றுக் கொள்ளப் போகிறோம் என்பதை நான் அறிவேன். அந்த சிறு காரியங்கள், அவர்களுக்கு வயதாகுந்தோறும் அதிகரித்துக் கொண்டே வரும் என்பது எனக்குத் தெரியும், அவர்கள் அதை அடையத்தான் வேண்டும். சாத்தான் ஒரு நபருடைய வாழ்க்கையில் முடிசூட்டுவதென்பது மிகவும் பயங்காரமான காரியங்களில் ஒன்றாகும் என்று நான் எண்ணுகிறேன். மிகவும் வயோதிகமான மனிதன் அல்லது ஒரு வயோதிக ஸ்திரீயினுடைய வாழ்க்கையிலும் அது நிகழ்கிறது, நீங்கள் பாருங்கள். நான்நான் அந்த நிலைமை அடையவில்லை என்று நான் நம்புகிறேன். என்னால் என்னுடைய பாரங்களை சுமந்து, என்னுடைய வாழ்க்கை தேவனுடைய மகிமையினால் முடிசூட்டப்பட வேண்டும் என்று நான் விரும்புகிற... ஒரு நிலையை அடைந்து, அவருடைய நீடிய பொறுமை, தயவு, சமாதானம், சாந்தம் ஆகியவைகளோடு பரிசுத்த ஆவியினால் நிறையப்படும் நிலையினையே அடைவேன் என்றே நான் நம்புகிறேன். 9 என்னை... என்னுடைய வாழ்க்கையினூடாக என்னை எப்பொழுதும் பாதித்து வருகிற என்னுடைய முக்கியமான காரியங்களில் ஒன்று நரம்புத் தளர்ச்சியாயாகவே இருந்து வருகிறது. அதாவது நான் மிகக் கடுமையாக உழைக்கும்போது, அப்பொழுது நான் உண்மையாகவே சோர்வுற்றுவிடுகிறேன். நான்.. அந்தவிதமான உணர்வு உண்டாகும் போது உங்களுக்காக யாருமே கவலைப்படுகிறதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள், நீங்கள் எல்லாருமே...உங்களுக்கும் கூட அத்தகைய உணர்ச்சி உண்டாகிறது. எனக்கு அது அதிகமாக உண்டாகிறது, உங்களுக்குத் தெரியுமா, அது உண்மையாகவே சில நேரத்தில் மிக மோசமாக உள்ளபடியால், என்னால் தாங்கமுடியவில்லை...அது இறுக்கத்தை உண்டாக்குகிறது. அதைத்தான் அது செய்கிறது. ஆகையால் அநேக சமயங்களில் அந்நிலையை நான் அடையும்போது, விசேஷமாக அநேக தரிசனங்கள் தோன்றும்போது, நீங்கள் பாருங்கள், அது என்னைப் பாதிக்கிறது. நான் ஒரு நபரைக் காணும்போது, "இது ஒரு தரிசனம். இல்லை , இல்லை , இல்லை , அது தரிசனம் அல்ல. ஆம்! இது தரிசனம் அல்லதானே?" என்றெல்லாம் நான் எண்ணுகிறேன். உங்களுக்குப் புரிகிறதா? அதனால் உண்டாகும் விளைவு என்னவென்று நீங்கள் உணருகிறதில்லை ஆகையால் அப்பொழுது ஆகையால் அப்பொழுது நீங்கள்நீங்கள் வியப்புறுகிறீர்கள். அதன்பின்னர் நீங்கள், "பரவாயில்லை, நீங்கள்...'' என்று யோசிக்கிறீர்கள். அதாவது அதன்பின்னர் நீங்கள் உங்கள் பட்சத்தில், "நல்லது, இப்பொழுது, நான் என்ன - என்ன செய்துள்ளேன்? இதோ நான் இருக்கிறேன், எனக்கு எனக்கு ஐம்பது வயதாகிறது. நான் கர்த்தருக்காக ஒன்றையுமே செய்திருக்கவில்லை; எனக்கு எனக்கு வயதாகிக் கொண்டே போகிறது என்ன..? என்று சிந்திக்கத் தொடங்கிவிடுகிறீர்கள். அப்பொழுது நீங்கள். நாம் அதை "மனப்போராட்டம்" என்று அழைக்கிறோம். ஏறக்குறைய என் வயதுள்ள சகோதரராகிய உங்களில் சிலருக்கு அவர்கள், "மனப்போராட்டம் உண்டாயிருத்தல்" என்று அழைப்பது நினைவிருக்கும். தகப்பனார் அதைக் குறித்து வழக்கமாக முன்னர் பேசியுள்ளார், அப்பொழுது அவர் என்னை பொருட்படுத்திக் கூறினார் என்று நான் வியப்புற்றேன். ஆனால் அவர் என்ன பொருட்படுத்திக் கூறினார் என்பதை இப்பொழுது நான் நிச்சயமாக அறிந்துள்ளேன். ஆகையால் அப்பொழுது நீங்கள் அந்தவிதமான உணர்வினைப் பெறுகிறீர்கள், அது ஒன்றும் உண்மையல்ல. அது நீங்களே, நீங்கள் அதை அறிவீர்கள். பாருங்கள், நீங்கள் அதை அறிவீர்கள், அது நீங்கள் அதை வெறுமென யோசிக்கிறதாயுள்ளது. 10 எனவே நான் என்னையே சற்று அமைதிப்படுத்திக் கொண்டு, சீக்கிரத்தில் வருமென்று நான் நம்புகிற அந்த வேகமான நேரத்திற்கு என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அப்பொழுது...நான் இப்பொழுதே ஒரு கூட்டத்திற்காக. அங்கே நியூயார்க் செல்ல வேண்டும். அதன்பின்னர் அங்கிருந்து ஷ்ரீவ்போர்ட்டுக்கு, பின்னர் பீனிக்ஸுக்கு திரும்பிச் செல்ல வேண்டும். அதன்பிறகு மேற்கு பாகத்தை சுற்றி வர வேண்டும்... அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தென் எல்லை. இப்பொழுது அவர்கள் என் வெளி நாட்டுப் பயணத்துக்காக ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கின்றனர், அது வருடத் துவக்கத்தில் ஒருகால் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில், அதைப் போன்ற ஏதோ ஒரு மாதத்தில் இருக்கும். நாங்கள் இந்த அடுத்த பயணத்தின் போது, நாங்கள் ஸ்டாக்ஹோல்மில் துவங்கி அல்லது ஆஸ்லோவில் தொடங்கி உலகம் முழுவது சுற்றி வரப் போகிறோம். 11 இப்பொழுது ஒரு விதமாக உடலைத் தேற்றிக்கொள்ள நான் சிறிது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன். கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த ஞாயிறு கென்டக்கியிலிருந்து திரும்பி வந்துவிடுவேன். கர்த்தருக்குப் பிரீதியாயிருந்து, சகோதரன் நெவில் ஆட்சேபிக்கவில்லையென்றால், கர்த்தருக்குச் சித்தமானால் நான் அடுத்த ஞாயிறன்று ஆராதனை நடத்த முயற்சிப்பேன். சகோதரன் நெவிலைப் போல, அவருக்கு சித்தமிருந்தால் நான் - நான் இங்கிருப்பேன். ஆம் ஐயா, அவர்... நெவிலைப் போலவே அவர் அதைக் குறித்து சித்தங் கொண்டிருந்தால், அவருக்கு சித்தமிருக்கும் என்றே நான் நம்புகிறேன். இப்பொழுது, கர்த்தருக்குச் சித்தமானால் பாருங்கள், அப்படியானால் நான் சீக்கிரத்தில் உங்களை விட்டு சிறிது காலம் பிரிந்திருப்பேன் என்று நான் நம்புகிறேன். 12 நான்.. அப்படியே சிறு செய்திகளை, நீங்கள் பாருங்கள், நான் என் இருதயத்தில் உள்ள ஏதோ ஒரு சிறு காரியத்தை எடுத்துக் கூற, அப்பொழுது நாம் அதன்பேரில் ஐக்கியங்கொள்ளும்படியாக, நான் அதை உங்களுக்கு வெளிப்படுத்திக் கூற வேண்டும் என்பது போல நான் நான் நான் உணருகிறேன். இப்பொழுது நான் அவைகளில் சிலவற்றைக் கூற வேண்டியவனாயிருக்கிறேன், அவைகளில் ஐந்து அல்லது ஆறு கடந்த சில நாட்களில் எனக்கு உண்டானவை. நான் இங்கிருந்து சில நாட்கள் அணில் வேட்டைக்காக சென்றிருந்தேன். நான் காட்டுக்குள் செல்லும்போது, ஒரு பென்சிலையும், எழுதுவதற்கான காகிதத்தையும் என்னோடு கொண்டு செல்கிறேன். புரிகிறதா? கிட்டத்தட்ட நல்ல பகல் வெளிச்சம் உள்ள போது, எங்காவது ஒரு மரத்தில் சாய்ந்து உட்காருவேன். நான் உறங்காமலிருந்தால், நான் ஜெபிக்கத் துவங்குவேன், அப்பொழுது எனக்கு, கர்த்தர் எனக்கு ஏதோ ஒன்றைத் தருவார், அப்பொழுது நான் அதைக் குறித்து சில குறிப்புகளை எழுதத் தொடங்குகிறேன். நீங்கள் பாருங்கள். நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள், நீங்கள் சுயநினைவை அடையும்போது. நான் இங்கு வந்து, அவை எல்லாவற்றையும் ஒரு புத்தகத்தில் எழுதிக் கொள்வேன். அதன்பின்னர் நான் பிரசங்கிக்க அழைக்கப்படும்போது, நான் ஓடி, என்னுடைய குறிப்புப் புத்தகத்தை எடுத்து, அதனூடாக படித்துப் பார்த்து விட்டு, நான் எதன் பேரில் பேசத் துவங்கலாம் என்று பார்ப்பேன், நீங்கள் பாருங்கள். அதுதான் இப்பொழுது நடந்தது. 13 ஆகையால் இப்பொழுது, கர்த்தருக்குச் சித்தமானால், நான் பேச விரும்புவது என்னவெனில்...நான் கூற முயற்சித்துக் கொண்டிருப்பது... நீங்கள் பாருங்கள், பெரிய, நீண்ட செய்திகளை சிறியதாக்க முயற்சிக்கிறேன்; ஏனென்றால் அந்த நீண்ட செய்திக்கோ உங்களுக்கு பல மணி நேரங்கள் தேவைப்படுகின்றன. கடந்த இரவு அங்கே சிக்காகோவில் கிட்டத்தட்ட முப்பது நிமிடங்களுக்கு ஒரு சிறு செய்தி அளிக்க கர்த்தர் எனக்கு உதவி செய்தார். அப்பொழுது யாரோ ஒருவர் என்னிடம் வந்து, "உம்மால் அவ்வாறு செய்தியளிக்க முடியாது என்று நான் நினைத்தேன், ஆனால் நீரோ அதை செய்துவிட்டீரே!” என்றார். ஆகவே உங்களுக்குத் தெரியும், கிட்டத்தட்ட இரண்டரை அல்லது மூன்று மணி நேரத்திலிருந்து முப்பது நிமிடங்கள். ஆகையால் இன்றிரவு நான் துரிதமாக பிரசங்கித்து, சிறு பயிற்சி பெறவும், உங்களை நீண்ட நேரம் பிடித்து வைக்கமாலிருக்கவும் விரும்புகிறேன். 14 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் எங்கு சென்றாலும் அது ஒரு பொருட்டல்ல, ஆனால் இங்கே உள்ள இந்த கூடாரத்தைப் போன்ற ஒரு இடம் ஒருபோதும் எங்குமே இல்லை. இது சொந்த சபையாய், இனிமையான இல்லமாயுள்ளது. நான் வீவர் குடும்பத்துக்கும், மரித்துப் போன இந்த விலையேறப்பெற்ற கருப்பு நிற சகோதரன் குடும்பத்திற்கும் என் அனுதாபத்தைத் தெரிவிக்கிறேன். நான் அவர் மரிப்பதற்கு முன்பு அவரோடு சற்று நேரம் ஜெபித்தேன், அவர் ஒரு அருமையான குணாதிசயம் கொண்டவர். அவர் இப்பொழுது தேவனோடு பரம் வீட்டில் இருக்கிறார், எல்லாமே முற்று பெற்றுவிட்டது. நீங்களும் எப்படியும் அங்கு செல்லத்தான் வேண்டும், நாம் யாவரும் அதை அறிந்துள்ளோம். ஆகையால் நாம்...கர்த்தர் தாமே அவர்களுடைய ஆத்துமாக்களை சமானத்துடன் இளைப்பாறச் செய்வாராக. என்றோ ஒரு நாள் நாம் அப்பாலுள்ள அந்த தேசத்தில் ஒன்று சேருவோம் என்று எதிர்பார்க்கிறோம். அங்கு வியாதி இல்லை, துக்கம் இல்லை, மரணம் இல்லை. அதுவரைக்கும் நாம் சுவிசேஷத்திற்காக நம்மால் செய்ய முடிந்த ஒவ்வொரு காரியத்தையும் செய்வோமாக. 15 இறுக்கத்தைப் பற்றிப் பேசும்போது: நான் அதைக் குறித்து இந்தக் காலையில் ஜெபித்துக் கொண்டிருந்தேன். உங்களுக்கு இறுக்கம் இல்லாமற் போயிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். இறுக்கம் வாழ்க்கையின் பாகமாயுள்ளது. நான் அதை நினைத்தபோது, அது என்னை ஒருவிதமாக உற்சாகப்படுத்தினது. உங்களுக்கு இறுக்கம் இல்லாமற்போயிருந்தால், நீங்கள் ஒரு கந்தைத் துணி பொம்மையைப் போல இருப்பீர்கள், நீங்கள் எவ்வித உணர்வுகளும் உடையவர்களாயிருந்திருக்கமாட்டீர்கள். நீங்கள் கிரியை செய்யும்படி ஒன்றுமே இருந்திருக்காது. ஒரு கணவனும் மனைவியும் போல, அவள் ஏதோ ஒரு காரியத்தை செய்ய விரும்பினால், அவர்கள் சேர்ந்து செயல்புரிய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். (குறிப்பாக கிறிஸ்தவர்கள்), மற்றொருவர் ஒன்றைச் செய்ய விரும்பினால்... நீங்கள் ஒன்றாக சேரும்போது...அவள் என்ன செய்துள்ளாள் என்பதை நீங்கள் கண்டறிகிறீர்கள்; அவளும் அறிந்து கொள்கிறாள். பாருங்கள், இறுக்கம் உண்மையாகவே உங்கள் இருவரையும் நெருக்கமாக கொண்டு வருகிறது. யாராகிலும் ஒருவர் உங்களிடம், “நீங்கள் நல்லவராயில்லாதபோது, உங்களுடைய மனைவி ஏராளமான இறுக்கத்தின் வழியாக கடந்து சென்றாள் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள் என்றோ அல்லது நீங்கள் நல்லவராயில்லாதபோது, உன் கணவர் இறுக்கத்தினூடாகச் சென்றார். அப்பொழுது அதெல்லாம் மன்னிக்கப்பட்டபோது, நீ அவரைக் குறித்து எப்படி உணர்ந்தாய் என்று பார். என்னே, நீ அப்படியே...” என்று கூறும்போது எப்படியிருக்கும்? பாருங்கள், நீங்கள் இறுக்கத்தை உடையவர்களாயிருக்க வேண்டும். அவ்வளவுதான். 16 உணர்வுகளைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள், உங்களுக்கு எந்த உணர்வும், எந்த வலிகளும், அல்லது எதுவுமே இல்லாமலிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்? வலியேயில்லாமலிருந்தால் எப்படியிருந்திருக்கும்? உங்களுக்கு எந்த உணர்ச்சிகளுமே இல்லாதிருக்கும். புரிகிறதா? உங்களுக்கு உணர்வு இல்லாதிருந்திருந்தால், அப்பொழுது உங்களுடைய புலன்களில் ஒன்று போய்விட்டிருக்கும். புரிகிறதா? ஆகையால், பாருங்கள், எப்படியோ ஒவ்வொரு காரியமும் சரியாயுள்ளது. ஆகையால், “தேவனே, அதைத் தாங்கிக்கொள்ள எங்களுக்கு கிருபை அளியும்,” அதுதான் காரியமாயுள்ளது. நாம் அந்த கிருபையுடன் அங்கு நின்று, “ இந்த வாழ்க்கை முடிவுறும்போது, மறுபுறத்தில் மகத்தான ஒன்று காத்திருக்கிறது, அங்கு செல்ல நாங்கள் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம்” என்று கூறினால் நலமாயிருக்கும். இப்பொழுது, நாம் - நாம் நினைவு கூருகிற இந்த எல்லாக் காரியங்களுமே ஒரு இறுக்கமாயுள்ளது. 17 அதாவது சில ஜனங்கள், “நீங்கள் கவலையிலிருந்து விடுதலையாகிறீர்கள். நீங்கள்...' என்று கிறிஸ்தவமார்க்கத்தை அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றனர். இல்லை, நீங்கள் அவ்வாறு ஆகிறதில்லை . “நீங்கள் இறுக்கத்தினின்று விடுபடுகிறீர்கள்” ஓ, இல்லை. நீங்கள் ஒரு கிறிஸ்தவராகும்போது நீங்கள் இறுக்கத்தை கூட்டுகிறீர்கள், ஏனென்றால் நீங்கள் அதுவரை ஒருவிதமான பொறுப்பற்று, சந்தோஷமாய் சுற்றிக் கொண்டு, என்னவாயிருந்தாலும், நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதைக் குறித்து கவலையற்று வாழ்ந்து வந்தீர்கள். 18 ஆனால் நீங்கள் ஒரு உண்மையான கிறிஸ்தவராகும்போது, “நான் என்னுடைய கர்த்தரைப் பிரியப்படுத்திக் கொண்டிருக்கிறேனா? அவர் கூறுவதை என்னால் கேட்க முடிந்தால் நலமாயிருக்குமே!” என்று ஒவ்வொரு விநாடியும் நீங்கள் வியப்புற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அது உங்களுக்கு இறுக்கத்தை விளைவித்து, உங்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்துகிறது. அதுதான் நீங்கள் என்னவாயிருக்க வேண்டும் என்று உங்களை உருவாக்குகிறது. ஆக மொத்தத்தில் இறுக்கம் என்பது ஒரு ஆசீர்வாதமாயுள்ளது. அது நீங்கள் அதை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிற விதத்தில் உள்ளது. அது நீங்கள் அதை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிற விதத்தில் உள்ளது. புரிகிறதா? நீங்கள் அதை மற்றப் பக்கத்தில் நோக்கினால், அங்கே அங்கே... நீங்கள் எதையாவது எவ்வளவு மெல்லியதாக அறுத்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, நீங்கள் அதற்கு இரண்டு பக்கங்களை உடையவர்களாயிருக்கிறீர்கள், நீங்கள் பாருங்கள். ஆகையால் நீங்கள் இரண்டு பக்கங்களையும் காண வேண்டும் 19 ஆகையால் இறுக்கம்...நான், அது... இது என்ன இறுக்கம்? இந்த இறுக்கம் இல்லாமல் நான் பிறந்திருந்தால் நலமாயிருந்திருக்குமே” எனலாம். நான் இந்த இறுக்கம் இல்லாமலிருந்திருந்தால், அப்பொழுது நான் இப்பொழுது இருக்கிற நிலையை உடையவனாயிருந்திருக்கமாட்டேன். ஒரு வேளை நான் கிறிஸ்தவனாகவே இருந்திருக்க மாட்டேன். இந்த இறுக்கமே இயேசு கிறிஸ்துவினண்டை என்னை விரட்டினது. புரிகிறதா? ஆகையால் இது எனக்கு ஒரு ஆசீர்வாதமாயிருந்து வருகிறது. 20 எனவே பவுல் கூறினது போல, அவனுக்கு ஒரு இறுக்கம் அல்லது ஏதோ ஒன்று அல்லது மற்ற ஏதோ ஒன்று இருந்தபோதிலும், அதை அவனிடத்திலிருந்து எடுத்துப் போடும்படிக்கு அவன் கர்த்தரிடத்தில் மூன்று தரம் வேண்டியிருந்தான். அதற்கு கர்த்தரோ, “சவுலே, என்னே...பவுலே, என் கிருபை உனக்குப் போதும்” என்று கூறினார். 21 அப்பொழுது பவுல், “நான் என் பலவீனங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவேன். ஆகையால் நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்” என்றான். பார்த்தீர்களா? அது தேவனுடைய சித்தமாயுள்ளவரைக்கும் சரியே. 22 இப்பொழுது, அது என்னை மிக மோசமாக தொல்லைப்படுத்தி, என்னை பயப்படுத்தின போது நான் ஒரு சமயம் அவரிடத்தில் வேண்டினேன். அவர் எட்டு அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் என்னிடத்தில் கூறினார், அவர், "அது உனக்கு ஒரு போதும் மீண்டும் பயத்தை விளைவிக்காது” என்றார். அதன்பிறகு அது எனக்கு ஒருபோதும் பயத்தை விளைவிக்கவே இல்லை. இல்லை ஐயா. அதைக் குறித்து கவலைப்படுவதேயில்லை. நான் அதை உணருகிறேன், ஆனால் அது அங்கு உள்ளது என்பதை நான் அறிவேன்; ஆனால் நான் தொடர்ந்து செல்கிறேன், ஏனென்றால் அது இனி ஒரு போதும் எனக்கு பயத்தை விளைவிப்பதேயில்லை, ஆகையால் அதற்காக மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இப்பொழுது, அவர், “அது இனிமேல் இருக்காது” என்று கூறியிருக்கலாம். ஆனால், “உனக்கு இனிமேல் பயத்தை விளைவிக்காது” என்றே கூறினார். 23 ஆகையால் அது சம்பவிக்கிறது என்பதே அவருடைய சித்தமாயுள்ளது, எனவே நான் அதை தழுவிக் கொண்டு, “கர்த்தாவே உமக்கு நன்றி, நான் அந்த விதமாக நடந்து செல்வேன்” என்று கூறுகிறேன். 24 இப்பொழுது, நாம் ஜெபத்திற்காக சற்று நேரம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. ஜெபத்திற்காக ஏதேனும் ஒரு விசேஷித்த விண்ணப்பம் உண்டா? (இங்கு உறுமால்கள் வைக்கப்பட்டிருக்கிறதை நான் காண்கிறேன்) உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். கர்த்தர், உங்களுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. 25 எங்கள் பரலோகப் பிதாவே, உம்முடைய மகத்தான, கிருபையின் மகத்துவமான சிங்காசனத்தை நாங்கள் இப்பொழுது அணுகக் காரணமென்னவெனில், நாங்கள் அவ்வாறு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம். இயேசு கிறிஸ்துவின் அழைப்பின் பேரில் நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்களுடைய எல்லா கவலைகளோடும் வந்து, அவைகளை அவர் மேல் வைக்கிறோம், ஏனென்றால் அவர் எங்களை விசாரிக்கிறவராயிருக்கிறார். அவர் எங்களை விசாரிக்கிறார் என்பதை அறிந்து கொள்வது என்ன ஒரு மகத்தான ஆறுதலாய் உள்ளது. பரலோகத்தின் மகத்தான தேவன், சிருஷ்டிகர், எங்களுக்காக, தமது சிருஷ்டிக்காக கவலை கொள்கிறார். கர்த்தாவே, நாங்கள் அதற்காக மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த நேரங்களில் உம்முடைய வார்த்தையிலிருந்தே ஆறுதலைப் பெற முடியும் என்று தோன்றுவது என்ன ஒரு ஆறுதலாய் உள்ளது, அதுவே எங்களுடைய ஆறுதலாயும், உம்முடைய வாக்குத்தத்தமாயுள்ளது. எங்களுடைய விண்ணப்பங்களை உமக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும், “நீங்கள் என் நாமத்தில் எதைக் கேட்டாலும், நான் அதைத் தருவேன்" என்று உம்முடைய வாக்குத்ததத்தில் நீர் கூறினீர். இந்த மகத்தான எல்லா வாக்குத்தத்தங்களும்; "கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். இந்த மலையைப் பார்த்து 'மெயர்ந்து போ' என்று சொல்லி சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அது அப்படியே ஆகும்.” இந்த மகத்தான எல்லா வாக்குத்தங்களின் மூலம் நாங்கள் கேட்டுக் கொள்கிறதை எங்களால் பெற்றுக் கொள்ள முடியும். 26 கர்த்தாவே, கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு ஏதோக் காரியம் தேவையாயுள்ளது. அவர்களுடைய தேவையை நீர் அறிந்திருக்கிறீர்; பிதாவே அதை அளியும். அவர்களுடைய ஜெபத்தோடு என்னுடைய ஜெபத்தையும் உமக்கு முன்பாக சமர்பித்து, என்னுடைய கரங்களை அவர்களுடைய கரங்களோடு உயர்த்துகிறேன். இங்கே இந்த மேஜையின் மேல் உறுமால்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஓ, கர்த்தாவே, எவ்வாறு ஜனங்களுக்கு விசுவாசத்துடன், தீரமான விசுவாசத்துடன்...வியாதியாயுள்ள ஜனங்களுக்காக நான் ஜெபிக்கும்படியாக நீர் என்னை ஆசீர்வதித்திருக்கிறீர் என்ற ஏதோ ஒரு காரியமாய் அது தென்படுகிறது. எங்கெல்லாம், எங்கிருந்தாலும், நான் எங்கெல்லாம் சென்றாலும், அது வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறதைக் குறித்த ஏதோ ஒரு காரியமாய் உள்ளது. தேவனே இப்பொழுது உதவி செய்யும். ஜனங்கள் வேண்டிக்கொண்டு இங்கு வைக்கப்பட்டுள்ள இந்த உறுமால்களின் விண்ணப்பங்களுக்கு நீர் பதிலளிக்க வேண்டும் என்று நான் உத்தமத்தோடு ஜெபிக்கிறேன். உம்முடைய இரக்கம் அவர்கள் மீது இருப்பதாக. 27 கர்த்தாவே, ஜெபம் ஏறெடுக்கப்படுவதற்கென வெகு தூரத்திலிருந்து விமானத்தில் இங்கு பறந்து வந்துள்ள ஒரு ஸ்திரீயை சகோதரி ஹிக்ஸ் இங்கு கொண்டு வந்திருக்கிறாள் என்று நாங்கள் அறிந்துள்ளோம், அந்த ஸ்திரீ புற்று நோயோடு உள்ளாள். அவளை இங்கு வரவழைக்கலாமா என்று சகோதரி அறிந்து கொள்ள விரும்பினாள். தேவனே, நீர் அந்த ஸ்திரீயின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், அதை அருளும். என் உடன் பிறந்தாரின் சிறு மகன் மிக்கி, அதிக காய்ச்சலினால் சுகவீனமாய் வாந்தியெடுத்து படுக்கையில் கிடக்கிறான். இப்பொழுது தான் அவனுடைய அறையைவிட்டு வெளியே வந்தேன். கர்த்தாவே, நாங்கள் அங்கு ஏறெடுத்த விசுவாச ஜெபத்தின் மூலம் நீர் அதை நிறுத்தி விட்டீர் என்று நான் நான் விசுவாசிக்கிறேன். நான்நான் நான் அதற்காக உமக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நான் அந்த அறையை விட்டு வெளியேறும் முன்னரே அந்தக் காய்ச்சல் அந்தப் பையனை விட்டுப் போனதை உணர்ந்தேன். 28 இப்பொழுது, கர்த்தாவே,... இந்த எல்லாக் காரியங்களுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இப்பொழுது உம்முடைய வார்த்தையின் பேரில் பேசுவது என்மேல் விழுந்த கடமையாயுள்ளது. கர்த்தாவே, உமது வார்த்தையை எனக்குத் தாரும். “உமது வசனமே சத்தியம்.” எங்கள் ஆத்துமாக்களை நீர் ஆசீர்வதித்து எங்களுக்கு தேவையாயுள்ள கிருபையை நீர் அளித்து, இன்றிரவு நாங்கள் தாமே வார்த்தையிலுள்ள தேவனுடைய வாக்குத்தத்தங்களை பெற்று, இந்த வாரம் முழுவதும் நாங்கள் பராமரிக்கும்படி அருள் புரியும். இந்த தீரமுள்ள ஆத்துமாவான எங்களுடைய மேய்ப்பரையும், அவருடைய மனைவியையும், பிள்ளைகளையும், உதவிக்காரர்களையும், தர்மகர்த்தாக்களையும் இந்தக் கட்டிடத்திற்குள் வருகிற மற்றும் வெளியேயுள்ள ஒவ்வொரு நபரையும் ஆசீர்வதிப்பீராக. அதை அருளும் பிதாவே. நாங்கள் இந்த ஆசீர்வாதங்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 29 இப்பொழுது, நான் கர்த்தருடைய புத்தகத்திலிருந்து இரண்டு இடங்களை வாசிக்க விரும்புகிறேன். நான் முதலாவது சங்கீதங்களின் புஸ்தகத்திலிருந்து வாசிக்க விரும்புகிறேன், 86வது சங்கீதம். அதன் பின்னர் நான் பரிசுத்த மத்தேயு 16-ம் அதிகாரத்திலிருந்து 1 முதல் 3 வரை வாசிக்க விரும்புகிறேன். நான் இந்த சங்கீதம் முழுவதையும் அல்ல, இதில் ஒரு பாகத்தையே வாசிக்க விரும்புகிறேன், ஆனால் 11-வது வசனம் முடிய, அந்த சங்கீதத்தில் பாதிக்குமேல் சற்று கூடுதலாக உள்ளது. 30 நான் இதை அறிவிக்க விரும்புகிறேன், நான் ஒரு பாடப் பொருளாக அழைக்க வேண்டுமானால், நான் அப்பொருளின் பேரில் பிரசங்கிக்கும் முன்னர்: இணையும் நேரமும் அடையாளமும் என்று அழைக்கிறேன். “இணையும் நேரமும் அடையாளமும்.” அது ஒருவிதமாக சிக்கலாகத் தென்படலாம். இணைதல்; புரிகிறதா? நேரம்; இணையும் நேரம், அதுதான் இப்பொழுது நடந்து வருகிறது. இணையும் நேரத்தின் அடையாளம். 31 தாவீதின் ஒரு ஜெபம், சங்கீதத்தில், 86-வது சங்கீதம்.கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்: நான் சிறுமையும் எளிமையுமானவன்.என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்.ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாடோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர் கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனியும். நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர். அது அழகாயுள்ளதல்லவா? “நீர் என்னைக் கேட்டருளுவீர்” ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை. ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள். தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்: நீர் ஒருவரே தேவன். இப்பொழுது கவனியுங்கள். கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும். நான் உமது சத்தியத்திலே நடப்பேன். நான் உமது நாமத்திற்குப்பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும். (இணைப்பு! புரிகிறதா?)...நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும். 32 நான் இப்பொழுது இணையும் நேரத்தையும், அடையாளத்தையும் குறித்தேப் பேசிக்கொண்டிருக்கிறேன். இப்பொழுது பரிசுத்த மத்தேயு 16-ம் அதிகாரத்தில். பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஒர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்க வேண்டும் என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்திரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள். உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது. அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்கு தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? கர்த்தர் தம்முடைய கிருபையுள்ள ஆசீர்வாதங்களை இந்த வார்த்தையின் வாசிப்போடு கூட்டுவாராக. 33 இப்பொழுது நாம் இந்த இணைதலை, இணையும் நேரத்தை, இணையும் நேரத்தின் அடையாளத்தைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். பாருங்கள், நாம் வாசித்த இந்த கடைசி வேத வசனத்தில் இயேசுவானவர் இங்கே, காலத்தின் அடையாளத்தை நிதானிக்க முடியாததற்காக அவர் குருவானவர்களைக் கடிந்து கொள்கிறார். இப்பொழுது, பாருங்கள், நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்தின் அடையாளத்தை நிதானிப்பதென்பது ஜனங்களுக்கு எப்பொழுதுமே ஒரு மகத்தான காரியமாகவே இருந்து வந்துள்ளது, ஏனென்றால் எவருமே அதைக் காணாமல் தப்ப முடியாதபடி தேவன் அதை வெளிப்படையாக எழுதுகிறார். 34 இப்பொழுது, பொதுவாக, நாம் திரும்பிச் சென்று, மற்ற ஊழியர்களிலிருந்து, வேதாகம காலத்தில் இருந்த மற்ற கர்த்தருடைய ஊழியக்காரர்களிலிருந்து துவங்குவோம் (நோவாவின் காலத்திலிருந்த அடையாளம், தானியேலின் காலத்தினுடைய அடையாளம் போன்ற வித்தியாசமான அடையாளங்கள்), ஆனால் நேரத்தை அதிகமாக செலவிடாதபடிக்கு அவைகளை எல்லாம் இன்றிரவு விட்டுவிட நான் விரும்புகிறேன்...ஆனால் அது ஒவ்வொருவரும் என்ன நேரமாயுள்ளது என்பதை அறிந்து கொள்ள காலத்தின் ஒரு ஒரு இயற்கையான அடையாளம் அவர்களுக்கு கொடுக்கும்படியான தேவனுடைய வழியாகவே எப்பொழுதும் இருந்து வருகிறது. இந்த பரிசேயர்கள் தங்களுடைய காலத்தை அறிந்திருக்க வேண்டும். அது என்னக் காலமாயிருந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்திருக்க வேண்டும். அவர் மற்றொரு இடத்தில், “நீங்கள் என்னை அறிந்திருந்தால், நீங்கள் என்னுடைய நாளையும் அறிந்திருப்பீர்கள்” என்றார். புரிகிறதா? அது-அது நாம் புரிந்து கொள்ளுகிற ஒரு ஒரு மிக மகத்தான காரியமாய் உள்ளது. பாருங்கள், “புரிந்து கொள்ளுதல் இல்லையென்றால்!” 35 அப்படித்தான் அவர்கள் எப்பொழுதுமே தீர்க்கதரிசிகளைக் குறிப்பிட்டனர், அவர்கள், “அவன் கர்த்தரிடத்திலிருந்து வரும் தரிசனங்கள் மூலம் புரிந்து கொள்ளுதலை உடையவனாயிருந்தான். பண்டைய தீர்க்கதரிசிகளிடத்திற்கு கர்த்தருடைய வார்த்தை வந்தது” என்றனர். பாருங்கள், அவர்கள் தீர்க்கதரிசிகளினால் உண்டான கர்த்தருடைய வார்த்தைகளினூடாக புரிந்து கொள்ளுதலை உடையவர்களாயிருந்தனர். தீர்க்கதரிசிகள் ஒரு அடையாளத்தைக் கொடுக்கின்றனர். உதாரணமாக ஒரு தீர்க்கதரிசி ஒரு பக்கம் நீண்ட நாட்களாக படுத்து, அதன் பிறகு மறுபக்கம் ஒருக்களித்துப்படுக்கிறான். வேறொருவன் தன் ஆடைகளைக் களைந்தான். அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திற்கான அடையாளத்தைக் காண்பிப்பதற்கென அநேகக் காரியங்களைச் செய்தனர். இப்பொழுது வானங்களையும் பூமியையும் படைத்த தேவன், தமது கிரியை தெளிவாக அமைத்து, தம்முடைய காலத்தை அவர் ஒரு அடையாளத்தின் மூலம் விவரித்துக் காண்பிக்கும் அதே தேவன் இன்றைக்கும் ஜீவிக்கிறார் என்று இப்பொழுது நாம் அறிந்திருக்கிறோம். ஆகையால் நாம் ஏதோ ஒன்றை... இருக்க வேண்டும்...நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற நேரத்தை நாம் பார்க்கும்போது, யாரோ ஒருவர் எங்கோ ஏதோ ஒன்றை எங்கோ கண்டு கொள்ளாமல் விட்டிருக்க வேண்டும். புரிகிறதா? காரணம் தேவன் நாம் புரிந்து கொள்ளும்படியாக, நமக்கு ஒரு திட்டவட்டமான அடையாளத்தை அளிக்காமல் இந்தக் காரியங்கள் சம்பவிக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். 36 இப்பொழுது இன்றைக்கு குருமார்களிடம் அந்தக் காரியம் உள்ளது, நாம் அதை சரிவர நிதானிப்பதில்லை. அது அப்பொழுது இருந்தது போலவே இப்பொழுதும் உள்ளது. அது தான் அந்த நேரம் என்று அவர்கள் நினைக்கவில்லை. அவர்கள் அப்பொழுது அழகாய் சமாதானத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தனர் என்றே அவர்கள்அவர்கள் எண்ணினர், ஆகையால் அவர்கள் மேசியாவை எதிர் நோக்கியிருக்கவில்லை . இயேசு தமது வருகை “இரவில் ஒரு திருடன் வருவதைப் போலிருக்கும்” என்று கூறியிருந்தார், அவருடைய வருகையைக் குறித்து ஜனங்கள் அறியாமலிருப்பர். ஆனால் சில கன்னிகைகள் அவரைச் சந்திக்கச் சென்றனர். அவர்களில் பாதிபேருக்கு தங்கள் தீவட்டிகளில் எண்ணெய் இருந்தது, அவர்கள் ஆயத்தமாயிருந்தனர். அவர்கள் அந்தஅடையாளத்திற்காக விழிப்புடன் எதிர் நோக்கிக் கொண்டிருந்தனர். இன்றிரவு அவர்களிடம்தான், பாருங்கள், அந்த அடையாளத்தை எதிர்நோக்கியிருப்பவர்களிடத்தில், அவருடைய வருகையின் அடையாளத்தை எதிர் நோக்கியிருப்பவர்களிடத்தில் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். 37 கர்த்தரால் அளிக்கப்பட்ட இந்த அடையாளங்கள் விசுவாசிகளுக்கு மாத்திரமே அளிக்கப்படுகின்றன். அவிசுவாசிகள் அதை ஒருபோதும் காண்கிறதில்லை. அது அவர்களுடைய தலைக்கு மேலே சென்று விடுகிறது, அவர்கள் அதைக் காண்கிறதில்லை. இப்பொழுது, நான் உங்களை நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மையாக தேவனுடைய தூதன் இன்றிரவு இந்த மேடையின்மேல் நின்று கொண்டிருக்கக் கூடும். நான் அதைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடும்; அல்லது நீங்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடும், நான் அதைக் காண முடியாமலிருக்கலாம் அல்லது நான் அதைக் காண முடிந்தது, நீங்கள் அதைக் காண முடியாமலிருக்கலாம். இப்பொழுது, அது வேதப் பிரகாரமானது என்பதை நீங்கள் அறிவீர்கள்; அது முற்றிலும் உண்மையே. அவர்கள் கண்டனர்...பவுல் தரையிலே விழுந்த போது, உங்களுக்குத் தெரியும், ஆனால் அவர்கள்...அவனோடு கூட இருந்தவர்களில் ஒருவனும் அந்த ஒளியைக் காண முடியவில்லை . 38 யோவான் ஸ்நானகன் குருமார்களும், அறிவாளிகளும், மகத்தான மனிதர்களைக் கொண்ட ஆயிரக்கணக்கானானோர் திரளாயிருந்த நதிக்கரையின் முன்னால் அங்கே நின்றபோது அந்த ஒளி அங்கே இருந்தது. தேவ ஆவியானவர் புறாவைப் போல் இயேசுவின்மேல் இறங்கி வந்ததாகவும், ஒரு சத்தம், “இவர் என்னுடைய நேசக்குமாரன், இவரில் வாசமாயிருக்க பிரியமாயிருக்கிறேன்” என்று உரைத்ததாகவும், யோவான்தானே அதைக் கண்டு சாட்சிப் பகர்ந்தான். ஆனால் யோவானைத் தவிர வேறுயாரும் அதைக் காணவில்லை . புரிகிறதா? அது அவனுக்கானதாயிருந்தது. 39 சாஸ்திரிகளுக்கான அடையாளத்தை நீங்கள் எப்படித் தெளிவாக கவனித்தீர்களா? அவர்கள் பார்த்தபோது...அவர்கள் எபிரெயராயிருந்தனர். அவர்கள் உண்மையாகவே இந்திய வான சாஸ்திரிகளாயிருக்கவில்லை, அவர்கள் எபிரெயர்களாயிருந்தனர்; ஏனென்றால் அவர்கள் வான சாஸ்திரம் பயின்று தங்களுடைய கல்வியை முடிக்க அந்த தேசத்திற்குச் சென்றிருந்தனர். அவர்கள்... எருசலேமை நோக்கின போது, அவர்கள் தோன்றின காம், சேம், யாப்பேத் வம்சங்களின் நட்சத்திரங்கள் தங்கள் சுழற்பாதையில் சென்று கொண்டிருக்கக் கண்டனர். அந்த நட்சத்திரங்கள் ஒரே வரிசையில் வரும்போது, மேசியா பூமியில் இருப்பார் என்பதற்கு அதுவே அவர்களுக்கு ஒரு அடையாளமாயிருந்தது. 40 அவர்கள் வந்து, "அவர் எங்கே? யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? நாங்கள் கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்திருக்கிறோம். அவர் எங்கே?" என்று கேட்டதில் வியப்பொன்றுமில்லையே. குழந்தை மேசியா எங்கோ ஓரிடத்தில் படுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர், ஏனென்றால் தேவன் அவர்களுக்கு அந்த காலத்தின் ஒரு அடையாளத்தைக் கொடுத்திருந்தார், அதாவது தேவனும் மனிதனும் ஒன்றாக இணைந்து கொண்டிருந்தனர். என்னே ஒரு இணைப்பு! தேவன் தம்மை ஒரு மானிட சரீரத்திற்குள் இணைத்துக் கொண்டாரே! முக்கியமாக தேவன் மனிதனோடு இணைத்துக் கொண்டதே இதுவரை நடந்த இணைப்புகள் அனைத்திலும் மிகப்பெரிய இணைப்பாகும். அவர் மகத்தான வல்லமையின் தேவனாயிருப்பதை விட்டு அகன்று தமது கூடாரத்தைப் பரப்பி மானிட சரீரம் பூண்டு அவர்களை மீட்க, அவர்களில் ஒருவரானார். இணைப்பு. அது என்ன? அது தேவனுக்கும் மனிதனுக்குமிடையே என்றென்றைக்கும் சமாதானத்தைக் கொண்டு வந்தது; அதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 41 அடையாளங்கள் வெறுமென அனுப்பப்படவில்லை .... இப்பொழுது சற்று சிந்தித்துப் பாருங்கள், அக்காலத்திலிருந்த ஒவ்வொரு மனிதனுக்கும், எல்லா வான சாஸ்திரர்களுக்கும் நட்சத்திரங்களே அவர்களுடைய கடிகாரங்களாக அமைந்திருந்தன. ஒரு ஜாமக்காரன் கோபுரத்தின் உச்சியில் ஏறி, அதைக் கவனிப்பான். நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஒரு நட்சத்திரங்கள், அவைகள் கடந்து செல்லும்போது, அப்பொழுது அது என்ன நேரம் என்பதை அவன் அறிந்து கொண்டு வந்தான். எனவே, "ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது?" என்னும் வேதவாக்கியம் உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அப்பொழுது ஜாமக்காரன் திரும்பி வந்து அது எந்த மணி நேரம் என்று கூறிவந்தான். பாருங்கள், அவர்கள் நட்சத்திரங்களைக் கொண்டே நேரத்தைக் கணக்கிட்டு வந்தனர். 42 இப்பொழுது, இந்த நட்சத்திரங்கள் சரியாக ஒரே வரிசையில் இருந்ததை மூன்று பேரைத் தவிர மற்றவர் எவருமே காணவில்லை என்பது விசித்திரமல்லவா? பார்த்தீர்களா? அவை பரிபூரணமாக ஒரே வரிசையில் அமைந்திருந்தன. இப்பொழுது, நீங்களும் வேதாகமத்தோடு வரிசையில் அமைய முடியும். புரிகிறதா? அந்த நட்சத்திரங்கள் இணைப்பில், இந்த நட்சத்திரக் கூட்டத்தில் தங்களை ஒன்றாக இணைத்துக் கொண்டபோது, மூன்று மனுஷரும் கூட அதே நேரத்தில் ஒன்றாக இணைந்தனர். நீங்கள் தேவனோடு, அவருடைய வார்த்தையில் ஒன்றாக இணையும்போது, இந்தக் காரியங்கள் உங்களுக்கு உண்மைகளாகிவிடுகின்றன, அப்பொழுது உங்களால் அவைகளை காண முடிந்து, அவைகள் உண்மை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. புரிகிறதா? காலத்தின் அடையாளம்! நீங்கள் அதை உங்கள் தலைக்கு மேல் போகவிட்டு, “ஆ, அர்த்தமற்றதாயிற்றே!” என்று கூறலாம். 43 ஆனால் உங்களுக்கு அது அர்த்தமற்றதல்ல. உங்களுக்கு, நீங்கள் வார்த்தையோடு இணைக்கப்பட்டிருக்கும்போது, அது இங்கு உண்மையாய் உள்ளது. சகோதரன் பாட், நீங்கள் இந்த அடையாளம் விசுவாசியுடன் இணைவதைக் காணும்போது, அப்பொழுது அது முற்றிலும் வெளிச்சமாயுள்ளது. நான் இதை விசுவாசிக்கு மாத்திரமே கூறிக் கொண்டிருக்கிறேன், ஏனென்றால் அவிசுவாசி அதை ஒரு போதும் காணமாட்டான். அவர் இன்றைக்கு பூமியில் இருப்பாரானால், இந்த அடையாளத்தை கண்டு கொள்ள முடியாத இன்றைய நம்முடைய அநேக குருமார்களுக்கு அது எப்படிப்பட்ட ஒரு கடிந்து கொள்ளுதலாய் இருக்கும்; நாம் இந்த அடையாளங்களை தினந்தோறும் இங்கே கூடாரத்தில் கண்டு கொண்டு, இவைகளைப் பார்த்து வருகிறோம். மற்றவர்கள் இந்த அடையாளத்தை படிக்கின்றனர், சுவற்றின் மேல் எழுதப்படும் கையெழுத்தையும் காண்கின்றனர், அனால் அதே சமயத்தில் அதை அசட்டை செய்து, அதைக் காணத் தவறுகின்றனர். அதுவோ அவர்களுக்கு ஒன்றுமில்லாததாய் உள்ளது, அவர்கள் அதைக் கவனிப்பதில்லை . 44 இப்பொழுது கவனியுங்கள், அவர் அவர் அவர்களுக்கு ராஜ்ய சம்மந்தமான அடையாளங்களைக் சுட்டிக் காண்பித்தார். இப்பொழுது அவர்கள் இதைக் குறித்து அவரிடத்தில் கேட்டபோது, அவர்கள் அடையாளங்களைக் காண விரும்பினர்; அவர் ஏற்கெனவே நடந்த அடையாளங்களை அவர்களுக்குக் கொடுத்தார். உலகத்தின் முடிவு எப்பொழுது சம்பவிக்கும் என்றும், முடிவின் அடையாளம் என்னவென்றும் அவர்கள் அறிந்து கொள்ள விரும்பினர். அவர் ராஜ்ய சம்மந்தமான அடையாளங்களைக் குறித்தும், வானத்தில் தோன்றும் பரலோக அடையாளத்தைக் குறித்தும், பூமிக்குரிய அடையாளத்தைக் குறித்தும் வேதவாக்கியங்களினூடாக அநேக இடங்களில் சுட்டிக் காட்டினார்; அவர் அவர்களுக்கு அடையாளங்களை, அடையாளத்தை, அடையாளங்களை, அப்படியே தொடர்ந்து ஒரு அடையாளத்தை கொடுத்தார். அவர் ஒரு இடத்தில் அவர்களிடத்தில் ராஜ்ய சம்மந்தமான அடையாளத்தை அங்கே கூறினபோது, அவர், “எருசலேம் ராஜ்யங்களால் சூழப்பட துவங்குவதை நீங்கள் காணும் போது, பாருங்கள், எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, பாருங்கள், அவர்களுடைய இக்கட்டு நேரம் சமீபமாயிற்று என்று நாம் அறிந்து கொள்கிறோம்,” என்று கூறினார். 45 இப்பொழுது, அவர்கள் இதை செய்வதற்கு முன்னர், தேவன்... உலகம் இணைய வேண்டியதாயிருந்தது. தீத்து, இந்த பெரிய ரோம தளபதி தன் சேனைகளை ஒன்றாக இணைத்து, இந்த யூதர்கள் தேவனால் அளிக்கப்பட்ட அக்காலத்து அடையாளத்தை புறக்கணித்த பிறகே அப்பட்டிணத்தை சுற்றி வளைத்தான். அந்த நேரத்தில் தீத்து அந்தப் பட்டிணத்தைக் கைப்பற்ற தன்னுடைய சேனைகளை ஒன்று சேர்த்து இணைத்தான். தேசம் தேவனுடைய ஜனங்களுக்கு விரோதமாக தன்னை இணைத்துக் கொள்வதற்கு முன்னர், தேவனுடைய ஜனங்கள் என்று தங்களை (அழைத்துக் கொள்பவர்கள்) தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக முதலில் இணைய வேண்டியதாயிருந்தது. பாருங்கள். இணைப்பு, இணைதல், ஒன்றாக இணைதல். 46 நாம் ஒரு மகத்தான இணைப்பின் நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் இந்த சிகப்பு விளக்குகளை, அறிகுறிகளாக பிரகாசிக்கிற ஒவ்வொரு காரியத்தையும் எடுத்து, அதாவது (ஸ்திரீகளைக் குறித்தும், அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்றும், புருஷர், அவர்கள் எப்படி நடந்து கொள்கின்றன என்றும், சபைகள், அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்றும்), இந்த சிறு குழுவிற்கு எடுத்துக் காண்பித்து, இந்த தீர்க்கதரிசன வேளையில் நாம் தேவனுடைய வார்த்தையின் வரிசையில் வந்து ஒழுங்குபடுத்திக் கொண்டு, கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு முன்னர் நாம் ஒன்றாக இணைந்து, ஆயத்தமாயிக்கொண்டிருக்கிறோம் என்பதை என் முழு இருதயத்தோடு நான் விசுவாசிக்கிறேன். 47 இப்பொழுது நீங்கள் பாருங்கள், தீத்து ராஜ்யங்களை.... தன்னுடைய சேனைகளை ஒன்றாக இணைப்பதற்கு முன்பு, இஸ்ரவேல் தேசம் தன்னை ஒன்றாக இணைத்துக் கொண்டு, இயேசு மேசியா என்று அவர்கள் விசுவாசிக்க மாட்டார்கள் என்று அறிவித்தது. அவர்கள் அவரைப் புறக்கணித்து, அவரை வெளியே துரத்தி விட்டு, அவரை சிலுவையில் அறைந்தனர். அதன்பின்னர், அவர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்டிருந்த இரட்சிப்பை புறக்கணித்த போது, அவர்கள் அதைப் புறக்கணிக்க தங்களை ஒன்றாக இணைத்துக் கொண்டனர். இப்பொழுது, அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்; அந்த மணி நேரத்துக்கான செய்தியைப் புறக்கணிக்க அவர்கள் தங்களை ஒன்றாக இணைத்துக் கொள்ளுதல்! அவர்கள் அதைச் செய்ய வேண்டியதாயிருந்தது. அப்பொழுது அவர்கள் அதைச் செய்தபோது, அந்த ராஜ்ய சம்மந்தமான அடையாளம் உள்ளே வந்தது. 48 ராஜ்யங்கள் தங்களை ஒன்றாக இணைத்துக் கொள்ளத் துவங்கினபோது, தீத்து ரோமர்கள் மற்றும் கிரேக்கர்களைக் கொண்ட இந்த பெரிய சேனையைக் கொண்டு வந்து, எருசலேமின் மதில்களை சூழ்ந்து கொண்டு, அந்த ஜனங்களை அங்கே உள்ளே அடைத்துப் போட்டு, அவர்களை பட்டினியால் சாகும்படிச் செய்துவிட்டான். அவர்கள் மரப்பட்டைகளைப் புசித்தனர். மகத்தான சரித்திர ஆசிரியர் ஜோஸிபஸ் அதை நமக்குக் கூறுகிறார். அவர்கள் தரையிலிருந்தபுற்களைப் புசித்தனர். அவர்கள் ஒருவர் பிள்ளைகளை மற்றவர் வேகவைத்தும் கூட புசித்தனர்; பாருங்கள், அவர்கள் பைத்தியக்கார ஜனங்களாகிவிட்டனர். அப்பொழுது முடிவிலே, தீத்து, அவன் அங்கே எருசலேமைச் சுற்றிலுமிருந்த மலைகளின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தான், அப்பொழுது அங்கிருந்த அந்த ஜனங்களோ இந்த சேனைகள் எருசலேமுக்குள் அணிவகுத்து வருவதைக் கண்டபோது, அவர்கள் தாங்கள் தேவனுடைய சித்தத்தை செய்து கொண்டிருந்ததாகவே எண்ணிக் கொண்டனர். அவர்கள் மகத்தான எஜமான் கர்த்தராகிய இயேசு அதை அவர்களுக்கு கூறினபோது அதற்கு செவி கொடுக்க மறுத்துவிட்டிருந்தனர். 49 அந்த முற்றுகையில் அங்கே ஒரு கிறிஸ்தவன் கூட உள்ளே அகப்பட்டுக்கொள்ளவில்லை, ஏனென்றால் அவர்கள் அடையாளத்தைக் கண்டு வெளியேறிவிட்டனர். புரிகிறதா? அவர்களுக்கோ, "வீட்டின் மேல் இருக்கிறவன் இறங்காதிருக்கக்கடவன். வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்கு திரும்பாதிருக்கக்கடவன். யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப் போகக் கடவர்கள். நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வு நாளிலாவது சம்பவியாதபடிக்கு வேண்டிக் கொள்ளுங்கள்” என்று கூறப்பட்டிருந்தது. காரணம் மாரிக் காலத்தில் மலைகள் பனியினால் நிறைந்திருக்கும்; ஓய்வு நாளில் பட்டிண வாசல் – வாசல் அடைக்கப்பட்டிவிடும். அப்படி சம்பவித்தால் அவர்கள் அந்த நிலையில் அகப்பட்டுக் கொள்வார்கள். புரிகிறதா? கர்த்தருக்குச் சித்தமானால், தேவன் எப்படி காரியங்களைச் செய்கிறார் என்று...நாம் சீக்கிரத்தில் அதைக் குறித்து அதன்பேரில் பேச விரும்புகிறோம். 50 இப்பொழுது கவனியுங்கள், அவர்...அப்படி சம்பவிக்கக் கூடாது என்று. அவர்கள் வேண்டிக் கொண்டனர், அதற்காக வேண்டிக் கொள்ளும்படி இயேசு அவர்களிடம் கூறியிருந்தார். எனவே அவர்களில் ஒருவராகிலும் உள்ளே அகப்பட்டுக் கொள்ளவில்லை. அவர்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டிருந்தனர், ஏனென்றால் அவர்கள் அடையாளத்தைக் கண்டிருந்தனர், எனவே அவர்கள் வெளியேறிவிட்டனர்; அது அவர்களைத் தவிர மற்றவர்களுக்கானதாய் இருக்கவில்லை. 51 நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற நேரத்தின் அடையாளத்தை சபைகள் இன்றைக்கு காண வேண்டியது எவ்வளவு முக்கியம் வாய்ந்தது! உங்களால் இயன்றரை ஜீவனுக்காக கல்வாரியண்டை விரைந்தோடுங்கள்; ஒரு சபையினிடமல்ல, ஆனால் இயேசு கிறிஸ்துவினிடத்திற்கு விரைந்தோடுங்கள். அவரோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள், ஏதோ ஒரு ஸ்தாபனத்தோடு அல்லது ஏதோ ஒரு சபைக் கோட்பாட்டோடு அல்ல. கிறிஸ்துவோடு இணைத்துக் கொண்டு, அது அவர் என்ற நிச்சயமுடையவராயிருங்கள். நீங்கள் வெறுமென ஏதோ ஒரு காரியத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது, அது அவர்தான் என்பதை நீங்கள் நிச்சயமாய் அறிந்திருக்க வேண்டும். என்னே ஒரு இணைப்பின் நேரம்! 52 இப்பொழுது, அவர்கள் மேசியாவைப் புறக்கணித்து, பின்னர் தங்களை ஒன்றாக இணைத்துக் கொண்டு, தங்களுக்கென ஒரு சங்கம் அமைத்துக் கொண்டு, எந்த நபராவது இயேசுவை ஒரு தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொண்டால், அவர்கள் சபையிலிருந்து தள்ளி வைக்கப்படுவர் என்று தங்களுக்குள்ளே அறிவிப்பைக் கூறிக் கொண்டனர் என்று நாம் கண்டறிகிறோம். குருடான கண்களோடு அந்த குருடன் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அப்பொழுது சீஷர்கள், "யார் செய்த பாவம்? அவனா அல்லது அவனுடைய தகப்பனா, அவனுடைய தாயா?" என்று கேட்டனர். 53 அதற்கு இயேசு, “இந்த விஷயத்தில் இவர்கள் இருவர் செய்த பாவமும் அல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான்” என்றார். 54 அவன் பார்வையடைந்ததை தகப்பனும் தாயும் கூற முடியவில்லை என்று அவர்கள் கூறினது நினைவிருக்கட்டும். அவர்கள், "இவன் எங்களுடைய குமாரன் என்று அவர்களுக்குத் தெரியும் என்றும், ஆனால் அவன் எப்படி குணமடைந்தான் என்பது எங்களுக்குத் தெரியாது” என்றும் கூறினர். காரணம் எந்த நபராவது இயேசுவை தீர்க்கதரிசி என்று அறிக்கைப்பண்ணினால், அவர்கள் தள்ளி வைக்கப்படுவர் என்று யூதர்கள் கூறியிருந்தனர். 55 ஆனால், நீங்கள் பாருங்கள், தேவனுடைய கிரியைகள் இந்த பையனை அந்தக் கூட்டத்தில் சேர்க்கவில்லை. அவன், “அவர் என் கண்களைத் திறந்திருந்தும், இந்த மனிதன் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது எனக்கு ஒரு விநோதமான காரியமாயிருக்கிறது” என்றான். பார்த்தீர்களா? இப்பொழுது, அவனால் அதைக் கூற முடிந்தது. பாருங்கள், அது தேவனுடைய கிரியைகள். அவன் குணமடைந்திருந்தான், அவன் எங்கும் யாருடனும் சேர்ந்திராத காரணத்தால் அவனால் அதைக் கூற முடிந்தது. அவனுக்கே தேவனுடைய கிரியைகள் செய்யப்பட்டதாயிருந்தன, அவன் நிச்சயமாகவே தன்னுடைய... தன்னுடைய வாழ்க்கையில் முதன் முறையாகப் பார்வைப் பெற்றான். 56 இப்பொழுது, யூதர்கள் தங்களை இயேசுவுக்கு விரோதமாகவும், அவருடைய மேசியாத்துவத்திற்கு விரோதமாகவும், அவருடைய மேசியா செய்திக்கு விரோதமாகவும் இணைத்துக் கொண்டனர். நாம் இப்பொழுது அதேக் காரியம், அப்படியே அதேக் காரியம் சம்பவிக்கிறதைக் காண்கிறோம். சபையை அழிப்பதற்கு கம்யூனிஸம் இணைந்து கொண்டிருக்கிறது, அந்த ஒரே வழியில் அது... செய்தியை, வார்த்தையை அழிப்பதற்கு, மறுதலிப்பதற்கு, சபைகள் அனைத்தும் உலக ஆலோசனை சபைகளின் சங்கத்தில், ஆலோசனை சபை சங்கத்தில் ஒன்றிணைந்த பிறகு இது நடக்கிறது. அவைகள் வார்த்தையைப் புறக்கணித்து விட்டன. சபைகள் அதைச் செய்துவிட்டன. அவைகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது, ஏனென்றால் அது அவர்களுடைய ஸ்தாபன கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளது. எத்தனை அக்கினி ஸ்தம்பங்கள் நம்முடைய ஜனங்களுக்கு மத்தியில் தொங்கினாலும் அல்லது எத்தனை ஜனங்கள்... எத்தனைக் காரியங்கள் முன்னுரைக்கப்பட்டு நிகழ்ந்தாலும், அவர் கடைசி நாளுக்கென வாக்களித்துள்ள எல்லா மகத்தான அடையாளங்களும் நடந்தாலும் கவலைப்படமாட்டார்கள்; அவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. 57 ஆகையால், அவர்கள் இப்பொழுது தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள், இங்குள்ள உங்கள் போதகரும், அதைக் குறித்து படித்துள்ள அநேகரும். உலக சபை சங்க ஐக்கியம் உருவாகிறதென்பதை உங்களிடம் எடுத்துரைக்க முடியும். அதற்கு லூத்தரன் போதகர் ஒருவர் தலைவராயிருக்கிறார். அதாவது ஒரு பேரிடர் உண்டானால், இங்கே இந்த சுற்றுப் புறத்தில் அது நிகழ்ந்தால், நாம் உலக ஆலோசனை சபை சங்கத்தில் இணையமலிருந்தால், அப்பொழுது நம்முடைய சபை இனி சபையாயிராமல், அவர்கள் அதை ஒரு சேமிப்பு கிடங்காக உபயோகிப்பார்கள். யாரோ ஒருவர் மரிப்பதை அல்லது அடிப்பட்டு கிடப்பதை நம்முடைய சகோதரரில் ஒருவர் கண்டால், அப்பொழுது அவர் அந்த நபருக்கு எந்த ஆவிக்குரிய ஆசீர்வாதத்தையாவது அளிக்க முயன்றால், நாம் அதற்காக சுட்டுக் கொல்லப்படக்கூடும். அது முற்றிலும் உண்மை . அவ்வாறு ஏதாவது உதவி செய்வதற்காக நமக்கு பத்து ஆண்டுகள் பெரிய மத்திய சிறைச் சாலையில் சிறைதண்டனை விதிக்கப்படக் கூடும், ஏனென்றால் நாம் இந்த உலக ஆலோசனை சபை சங்க இயக்கத்தில் ஒரு உறுப்பினராயில்லதபடியால் அவ்வாறு நடக்கும். மிருகத்தின் முத்திரையை உங்களால் காண முடியவில்லையா? பார்த்தீர்களா? புரிகிறதா? 58 இப்பொழுது, நாம் இந்த இணையும் நேரம் வருகிறதைக் காண்கிறோம். பார்த்தீர்களா? இப்பொழுது, கவனியுங்கள் ! ஆகையால் சபையானது செய்திக்கு விரோதமாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளது; ஆகையால் அது அப்படி செய்யும்போது, மீண்டும் சபையை அழிப்பதற்கென ராஜ்யங்கள் தங்களை கம்யூனிஸ்த்தில் இணைத்துக் கொண்டிருக்கின்றன. சரியாக முதலில் அதையே அது செய்தது. புரிகிறதா? அதுவே மீண்டும் நடக்கிறது. 59 இஸ்ரவேல் முதல் செய்தியைப் புறக்கணித்தது. அவர்கள் செய்தியைப் புறக்கணித்தபோது, ராணுவம், இன்னும் (மற்ற தேசங்கள்) அனைத்தும், ஒன்றிணைந்து புறப்பட்டு வந்து, சபையை நிர்மூலமாக்கின. இன்றைக்கும் அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் செய்தியைப் புறக்கணித்துவிட்டனர், அவர்கள் அதைப் புறக்கணித்தே விட்டனர். இப்பொழுது, கம்யூனிஸம் உலகத்தை சபைக்கு எதிராக இணைக்கும் நேரம் வந்துள்ளது. பாருங்கள், அது அந்த விதமாகத்தான் நடக்க வேண்டும். இப்பொழுது அதைக் கூறுவதற்கு கடினமாக உள்ளது. 60 அதை விசுவாசிப்பது யூதர்களுக்கு கடினமாகவே இருந்தது, அவர்கள், “சகோதரரே, இப்பொழுது வாருங்கள், நம்முடையநம்முடைய தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதை நாம் காண்கிறோம், எனவே நாம்- நாம் ஆலயத்திற்குச் செல்வோம். இப்பொழுது நாம் ஜெபிப்போம், பரிசுத்த பிதா இன்னார் - இன்னார், பரிசுத்தப் பிதா இன்னார் இன்னார் ஜெபத்தில் வழி நடத்தட்டும். வாசலை மூடுங்கள்” என்றனர். தீத்து தன்னுடைய சேனையை அழைத்துவந்து, ஏறக்குறைய ஒரு வருடம் அல்லது அதற்கும் மேலே அங்கே வந்து முற்றுகைவிட்டான். பாருங்கள், அங்கே முற்றுகையிட்டதினால் அவர்களை பட்டினியால் வாட்டினான். அவர்களில் ஒருவர் கூட பட்டிணத்தைவிட்டு வெளியே வர முடியவில்லை; எனவே அவர்கள் பட்டினியால் மரித்தனர். அவன் அங்கு சென்று மதில்களை இடித்து, அங்கிருந்த எல்லோரையும் அவன் வெட்டிக் கொன்றபோது, இரத்தம் ஆறுபோல பாய்ந்தோடினது. 61 இப்பொழுது, பழைய ஏற்பாட்டில் கர்த்தருடையத் தூதனானவர் அப்படி சம்பவிக்கும் என்று கூறி தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார். குருமார்களாயிருந்த அந்த ஊழியக்காரர்கள் அதை அறிந்து ஜனங்களுக்கு கூறியிருந்திருக்க வேண்டும்: ஆனால் அதற்குப் பதிலாக இயேசு அவர்களை மத்தியில் நின்றபோது, அவர்கள் அவரை அறிந்திருக்கவும் கூட இல்லை. ஒரு மாயாஜால வித்தைக்காரரைப் போலாக்க முயற்சித்து, “எங்களுக்கு ஜாலவித்தையைச் செய்யும், அது எப்படி செய்யப்படுகிறது என்பதை நாங்கள் காணட்டுமே! எங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டும்” என்றுக் கூறினர். பார்த்தீர்களா? அவர், “நான்...” என்றார். காரணம், அவர் அநேகக் காரியங்களைச் செய்திருந்தார், அதே சமயத்தில் அவர்களால் அதைக் காண முடியவில்லை . புரிகிறதா? அப்பொழுது அவர்கள் அவரைப் புறக்கணித்தபோது... அந்த நாளின் செய்தியை, அவர்கள் அந்த நாளின் செய்தியைப் புறக்கணித்தனர். அவர்கள் அந்த நாளின் அடையாளத்தைக் காணத் தவறினர். வேதாகம தீர்க்கதரிசன அடையாளம் அவர்களுக்கு முன்பாக செய்யப்பட்டது, அப்பொழுது அவர்கள், “இப்பொழுது நாம் உள்ளே செல்வோம்” என்றனர். அவர்கள் பரிசுத்த மனிதர்களாயிருந்தனர். நீங்கள் உங்களுடைய விரலை நீட்டி அவர்களுடைய ஜீவியத்தை குற்றப்படுத்த முடியாதபடி அவர்கள் பரிசுத்த மனிதர்களாயிருந்தனர். அவர்கள் குற்றமுள்ளவர்களாயிருந்து, ஒரு ஒரு ஒரு ஆசாரியராய் இருக்க முடியாது. அப்படி களங்கமுள்ளவனாயிருந்தால், அப்பொழுது அந்த ஆசாரியன் கொல்லப்படுவான், ஒரு சிறு காரியத்திற்காகவும் அவன் கல்லெறிந்து கொல்லப்படுவான். ஆகையால் அவன் ஒரு சுத்தமான, பரிசுத்த ஜீவியம் ஜீவிக்க வேண்டியவனாயிருந்தான். அவனால் எந்த தவறையும் செய்ய முடியாதிருந்தது, ஏனென்றால் எந்த சிறு தவறுக்காகவும் அவன் கல்லெறிந்து கொல்லப்பட்டான். இப்பொழுது அவர்களோ ஜனங்களுடைய பார்வையில் மகத்தான மனிதர்களாயும், பரிசுத்த மனிதர்களாயுமிருந்தனர், அதே சமயத்தில் அவர்கள் உள்ளே சென்று, "இப்பொழுது, நாங்கள்... நாங்கள் தேவனை உடையவர்களாயிருக்கிறோம், காலங்களினூடாக தேவன் எங்களோடே கூட இருந்து வருகிறார். எனவே நாம் அவருடைய ஆலயத்திற்குள் செல்வோம்” என்றனர். அது தேவனுடைய பரிசுத்த ஆலயமாயிருந்தது! ஆனால், நீங்கள் பாருங்கள், அவர் தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருந்து புறம்பாக்கப்பட்டிருந்தார். பார்த்தீர்களா? “நாம் கர்த்தருடைய வீட்டிற்குச் செல்வோம். நாம் இங்கே, நாம் தெரிந்துக்கொள்ளப்பட்ட ஜாதி என்பதை இங்குள்ள எபிரேயராகிய நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். தேவன் நம்முடைய தேவனாய் இருக்கிறார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவன், அவர் நம்மோடிருக்கிறார். அவர் அங்கிருந்த விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியரிடத்திலிருந்து விடுவித்தது போல, (முன்பு அவர்கள் இருந்ததைப் போல) இந்த ரோமர் மற்றும் கிரேக்கரிடத்திலிருந்து விடுவிப்பார். அவர் நம்மை அதிலிருந்து விடுவிடுப்பார். நாம் கர்த்தருடைய வீட்டிற்குள் போவோம்” என்றனர். 63 அது நன்றாகத்தான் தொனித்தது, ஆனால் அவர்கள் என்ன செய்திருந்தனர்? அந்த வீட்டைக் கட்டினவர் தாழ்ந்த கலிலேய தச்சனாக அங்கிருந்தார். அவர்கள் அவரை புறக்கணித்திருந்தனர்; அந்த நேரத்துக்கான அவருடைய செய்தியாளன் என்றும், கிளை என்றும் தேவன் ரூபகாரப்படுத்தின போது, அவர்களோ அவரைப் புறக்கணித்தனர். ஆகையால் எல்லா ஜெபமும், எல்லா உத்தமமும், அவர்களுடைய எல்லா பலிகளும் தேவனுக்கு ஒன்றையுமே பொருட்படுத்தவில்லை. அவர்கள் அதைச் செய்திருந்தனர். அதை அழிக்க தேவன் இந்த சேனையை இணையும்படி அனுமதித்தார். 64 சபைகள் ஸ்தாபனங்கள் போன்றவற்றினூடாக தேவனுடைய வார்த்தையை புறக்கணிப்பதை நாம் இன்றைக்குக் காண்கிறோம். இந்தக் காரியங்களைக் குறித்து நீங்கள் அவர்களிடம் கூறுவதை அவர்கள் விரும்பவில்லை, விஞ்ஞானம் அதைப் புகைப்படங்கள் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தின் மூலமும் அதை நிரூபிக்க முடியும், அப்படி நிருப்பித்தாலும் அவர்கள் அதனோடு எந்த சம்மந்தமும் வைத்துக் கொள்ள விரும்புகிறதில்லை. தீத்து மந்தமும் வைத்திருப்பித்தாலும் அவர்மும் அதை நிரூபிக்செய்தது போலவே, சரியாக, அதை நிர்மூலமாக்க கம்யூனிஸம் உருவாகிக்கொண்டிருக்கிறது. அவர்கள் அதைச் செய்வார்கள் என்று வேதம் உரைத்துள்ளது. சரியாக! 65 இப்பொழுது, நாம் எங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் காண்கிறீர்களா? இணையும் நேரம். இந்தக் காரியங்கள் இணைக்கப்படுவதை நாம் காணும்போது, ஏன்? நாம் அந்தக் காரியங்களைக் காண தவறுகிறோமே! அவர் என்ன செய்வதாக வேதத்தில் எங்கே வாக்குத்தத்தம் செய்தார் என்பதை உங்களால் உங்களால் இங்கே வேதவாக்கியத்தில் நோக்கிப் பார்க்க முடியும். இப்பொழுது, அது நிறைவேறுகிறதை நாம் காண்கிறோம். அவர் செய்வதாக வாக்குப்பண்ணினதை நாம் சபையில் காண்கிறோம்; நாம் அது நிறைவேறுவதைக் காண்கிறோம். தேசங்கள் ஒன்றாக இணைவதை நாம் காண்கிறோம். அவர் செய்வதாக வாக்குப்பண்ணினதை நாம் சபையில் காண்கிறோம்; நாம் அது நிறைவேறுவதைக் காண்கிறோம். தேசங்கள் ஒன்றாக இணைவதை நாம் காண்கிறோம். நாம் கொள்கைகள் ஒன்றொடொன்று இணைவதைக் காண்கிறோம். சபைகள் ஒன்றாக இணைவதை நாம் காண்கிறோம். இது இணையும் நேரமாயுள்ளது. இது இணையும் வேளையாயுள்ளது. அதாவது, "நாம் இணைய வேண்டும்” என்பது இக்காலத்தின் ஆவியாயுள்ளது. நீங்கள் பேசுகிற ஒவ்வொருகாரியமும் ஸ்தாபன அமைப்பாக வேண்டியதாயுள்ளது; இல்லையென்றால் அரசாங்கம் கூட அதை ஏற்றுக் கொள்ளாது. 66 உங்களுக்குத் தெரியுமா, ஒரு குடிமகன் என்னும் முறையில்... அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடிமகன் என்னும் முறையில், ஒரு குடிமகன் என்ற முறையில் என்னால் முடியாது, அதே சமயத்தில் நான் - நான்... நீங்கள் எனக்கு ஐந்து டாலர்களுக்கு ஒரு காசோலை வழங்கினால், நான் அதில் என் பெயரை எழுத துணிவு கொள்ள மாட்டேன். புரிகிறதா? பாருங்கள், என்னால் அதைச் செய்ய முடியாது. பாருங்கள், இது ஒரு இணையும் நேரமாயுள்ளது. இவை யாவும் ஏதோ ஒரு விதமான சங்கத்தினூடாகவே செல்ல வேண்டியதாயுள்ளது, அந்த சங்கமே மிருகத்தின் முத்திரையைக் கொண்டு வருகிறதாயுள்ளது. புரிகிறதா? இது ஒரு இணையும் நேரமாயுள்ளது, இது சரியாக அதற்குள்ளாகவே கிரியை செய்து கொண்டிருக்கிறது, உங்களால் அதை உங்களுடைய வெளிப்படையான கண்களைக் கொண்டே பார்க்க முடியும், நீங்கள் அதை நோக்கிப் பார்த்தால் நலமாயிருக்கும். இது ஒரு இணையும் நேரமாய் உள்ளது, ஒவ்வொரு காரியமும் ஒன்றாக இணைந்து கொண்டிருக்கின்றன. 67 யூதர்கள் - யூதர்கள் தங்களை இயேசுவுக்கு விரோதமாக, தங்களுடைய தங்களுடைய மேசியாவிற்கு விரோதமாக இணைத்துக் கொண்டனர். ஆகையால் என்ன சம்பவித்தது என்பதை நாம் காண்கிறோம். இப்பொழுது அதேக் காரியத்தை இரு குடிமகன் என்று நீங்கள் எனக்கு என் பெயரைநாம் காண்கிறோம், கம்யூனிஸம்ச பையை அழிக்க இணைகிறது, சபையானது உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தில் இணைந்துவிட்ட பிறகு செய்தியை, தேவனுடைய வார்த்தையை அழிக்க முயற்சிக்கிறது. அவர்கள் தேவனுடைய வார்த்தையை வெளியேற்ற முயற்சிக்கின்றனர். அவர்கள் அதைச் செய்யக் கூடிய ஒரேக் காரியம் தங்களை ஒரு சங்கமாக அமைத்துக் கொள்வதேயாகும், ஏனென்றால் அவர்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றனர்; அதாவது இங்கே ஒரு சிறு கூட்டமாய், மெத்தோடிஸ்டுகளாய், பாப்டிஸ்டுகளாய், லூத்தரன்களாய், பிரஸ்பிடேரியன்களாய், கிறிஸ்துவின் சபை என்ற ஸ்தாபன சபையாய், அந்தவிதமாக பிரிக்கப்பட்டிருக்கின்றனர். எனவே அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது, ஏனென்றால் இந்த ஒன்று இந்த ஒன்றுக்கு எதிராகவும், இந்த ஒன்று மற்ற ஒன்றுக்கு எதிராகவும், அவர்களுடைய உபதேசம் கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூராமாக வேற்றுமையாயும் உள்ளது. பாருங்கள். அவர்களால் அதைச் செய்ய முடியாது. ஆனால் ஒரு பெரிய தலைமையின் கீழ் ஒன்று சேரும்போது, அவர்கள் அதைச் செய்வார்கள். அப்பொழுது அவர்கள் அதைச் செய்து விடுவார்கள். 68 அந்த விதமாகத்தான் கத்தோலிக்கர்கள், ரோமன் கத்தோலிக்கர் இணைந்திருக்கின்றனர். உண்மையாகவே அவர்கள் ஒரு இணைப்பில் உள்ளனர், அவர்கள். பெரும்பான்மையோர் ரோமன் கத்தோலிக்கராயிருக்கிறார்கள்; கிரேக்கர் மற்றும் மற்ற கத்தோலிக்கர்களும் ரோமன் கத்தோலிக்கரைப் போல அவ்வளவு அதிகம் பேர் அல்ல. இப்பொழுது அவர்கள் ஒன்றாக இணைகின்றனர், அந்தக் காரணத்தினால்தான் அவர்கள் ஒன்றாக நிற்கின்றனர். என்ன சம்பவித்தாலும் பொருட்படுத்தமால், அந்த போப்பாண்டவரே ஒவ்வொரு காரியத்திற்கும் தலைவராயிருக்கிறார். புரிகிறதா? யார் என்னக் கூறினாலும் பொருட்படுத்தாமல், “அவரே பிழையற்றவர். அவர்அவர் அவர் ஒரு தேவனுடைய பிரதி குருவாய் இருக்கிறார், அவ்வளவுதான்; அவர் தேவனுக்கு அடுத்தபடியாக இருக்கிறார்; அவர் நரகம், பரலோகம், பாவவிமோசன ஸ்தலம் ஆகியவற்றின் மேல் ஆதிக்கமுடையவராயிருக்கிறார். புரிகிறதா? ஆகையால் அந்தக் காரியத்தில் செய்யப்படுவதற்கு ஒரு காரியமும் இல்லை; அவர் என்னவெல்லாம் கூறுகிறாரோ, அந்தவிதமாகவே செல்ல வேண்டும். 69 இப்பொழுது, பிராட்டெஸ்டென்டுகளும் அதைப் போன்றே ஒரு தலைவனை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர், அதேவிதமாகவே. மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணப்பட்டதாக வேதம் கூறுகிறதல்லவா? சொரூபம் என்றால் என்ன? அது அதைப் போல இருப்பது, அதைப் போல வேறொன்று செய்யப்படுவதாகும். அதுதான், அதேக் காரியம் தான். அது என்ன? தங்களை ஒன்றாக இணைப்பதன் மூலமே, இணைதல், இது இந்த காலத்தின் ஆவியாயுள்ளது. 70 செய்தியை அழிக்கும்படி முயற்சிக்கவே இப்பொழுது ஒன்றாக இணைகின்றனர். அவர்கள் எப்படி அதை அழிக்கிறார்கள்? எப்படி அவர்களால் தேவனுடைய வார்த்தையை அழிக்க முடியும்? அவர்களால் அதை துவக்கத்தில் செய்தது போன்று, பாரம்பரியங்களை ஏற்றுக் கொள்வதன் மூலம் அதை அவமாக்க முடியும், தேவனுடைய வார்த்தையை அவமாக்க முடியும். பாருங்கள், அவர்கள், “ஓ, அது. உண்மையாகவே, மொத்தத்தில்...” என்கின்றனர். இந்த நாத்தீகப் பெண் அங்கே என்ன செய்ய முயன்றாள் என்று நீங்கள் பார்த்தீர்களா,...அவள்.. அவளுடைய பெயர் என்ன என்பதை இப்பொழுது நான் மறந்துவிட்டேன்; என்னால் அதை ஞாபகப்படுத்த முயன்றால் நலமாயிருக்கும். அவள்...நான் அநேகக் காரியங்களைக் குறித்து நினைத்துப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். 71 நான் அன்றொரு நாள் இந்த தேசத்தில் குமாரி நேஷன்ஸ் பட்டம் பெற்ற பெண்மணியைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன்; நமக்கு அதைப் போன்ற வேறொன்று எழும்பினால் நலமாயிருக்கும் என்று நான் விரும்பினேன். அவள் மது அருந்தும் இடங்களுக்குச் சென்று, அங்கிருந்த மதுபானங்களை வீசியெறிந்து, அங்கிருந்த அடையாளங்களையும், அதைப் போன்ற ஒவ்வொரு காரியத்தையும் வீசியெறிந்தாள். இன்றைக்கு ஏன் அது போன்று சில ஸ்திரீகள் எழும்பி, இங்கிருந்து புறப்பட்டுச் சென்று, அவளுடைய சொந்த இனைத்தைச் சேர்ந்த நிர்வாணப் புகைப்படங்களை, அது போன்றக் காரியங்களை கிழித்தெறியக் கூடாது? அதாவது, அப்பொழுது அவர்கள் அப்படிப்பட்ட புகைப்படங்களை ஒருபோதும் வைத்திருக்கமாட்டார்கள். 72 இப்பொழுது, ஆனால் இந்த ஸ்திரீ, நாத்தீக ஸ்திரீ, “வேதம் பொதுவான பள்ளிக் கூடங்களில் படிப்பது சட்ட விரோதமானது” என்று கூறினாள், அதேபோன்ற காரியங்கள். 73 இப்பொழுது அவர்களும் கூட, நீங்கள் மீண்டும் அதை கவனித்தீர்களா? இப்பொழுது அவர்கள் கூற முயற்ச்சித்துக் கொண்டிருப்பது என்னவெனில், பெரிய வேத ஆராய்ச்சியாளர்கள், "வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான தீர்க்கதரிசனங்கள் முற்றிலும் தவறு என்றும், அவை ஒருபோதும் நிறைவேறவில்லையென்றும்" கூறியுள்ளனர். நீங்கள் அதைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள், அதை வாசித்திருக்கிறீர்கள். அவர்கள் இப்படியே ஒவ்வொரு காரியத்தையும் கூற முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்; நீங்கள் பாருங்கள், அவர்கள் வார்த்தையின் வல்லமையை நிர்மூலமாக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மாத்திரம் அதை நிர்மூலமாக்கி அதற்குப் பதிலாக மனிதன் வைத்துள்ள கோட்பாடுகளை அல்லது ஏதோ ஒன்றை நுழைத்தால், அப்பொழுது அவர்களுடைய பார்வையில் அது வார்த்தையைக் காட்டிலும் சிறந்ததாகத் தென்படுகிறது. அப்பொழுது அவர்கள் அதை அவர்களுடைய-அவர்களுடைய பாரம்பரியத்தைக் கொண்டு நிர்மூலமாக்குகின்றனர். அந்த விதமாகத்தான் அவர்கள் வார்த்தையை அழிக்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர், ஸ்தாபன அரசியல் மூலமாக அழிக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். 74 இப்பொழுது, ஒவ்வொரு சபையும் அதனுடைய சொந்த அரசியலை உடையதாயிருக்கிறது. சர்ச் ஆப் கிரைஸ்ட் தன்னுடைய சொந்த அரசியலையும், கிறிஸ்டியன் சபை அதனுடைய சொந்த அரசியலையும், பாப்டிஸ்டுகள், மெத்தோடிஸ்டுகள் மற்றும் பிரஸ்பிடேரியன்கள்; அவர்கள் எல்லோருமே அவர்களுடைய வித்தியாசமான அரசியலை உடையவர்களாயிருக்கின்றனர். இப்பொழுது அவர்கள் பிரிக்கப்பட்டிருக்கிற காரணத்தால் அவர்கள் அதிலிருந்து விலகிக்கொண்டிருக்கிறார்கள். பாருங்கள், அதை இதற்கு முன்னர் செய்திருக்க முடியாது, அவர்கள் அதை இப்பொழுது செய்ய வேண்டு. பாருங்கள், இது இணையும் நேரமாய் உள்ளது, அவர்கள் எல்லாவற்றையும் இப்பொழுது ஒன்று சேர்த்து அதிலிருந்து என்ன தோன்றும் என்று காண முற்படுகின்றனர். என்னே, அது குதிரை இறைச்சியிலிருந்து ரொட்டித் துண்டை உண்டாக்க முயல்வது போன்றதாகும், குப்பைத் தொட்டியிலிருந்து எடுத்து, இன்னும் என்னவெல்லாம் அவர்களால் ஒன்று சேர்க்க முடியுமோ அவைகளை ஒன்று சேர்த்து கலக்கி, அதில் சில அழுகிப்போன உருளைக் கிழங்குகளைப் போட்டு, இன்னும் மற்றக் காரியங்களைச் சேர்த்து, அதிலிருந்து என்ன கிடைக்கும் என்று பார்க்க விரும்புகின்றனர். எனக்கு நிச்சயமாகவே அதிலிருந்து எந்தக் காரியமும் வேண்டாம். வேண்டாம், ஐயா, அந்த விதமாகத்தான் அவர்கள் அதை செய்து கொண்டிருக்கிறார்கள். பாருங்கள், இயேசு ஒரு கட்டுக் கதை என்று நம்புகிற ஜனங்களையும், இயேசு ஒரு கட்டுக்கதை என்று நம்புகிற ஒரு சபையையும், அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தார் என்று விசுவாசிக்கிற மற்ற சிலரையும் ஒன்று சேர்த்துக் கொண்டிருக்கின்றனர். 75 ஒருவர், “அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன” என்று கூறுகிறார். 76 மற்றொருவர், “அப்படிப்பட்ட ஒரு காரியம் இருக்கலாம்” என்றார். 77 இப்படிப்பட்ட எல்லாரும் ஒன்று சேருகின்றனர்; வேதமோ, "இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ?” என்று கூறியுள்ளது. புரிகிறதா? இப்பொழுது அந்தவிதமான ஒரு இணைப்பையே அவர்கள் பெற்றுள்ளனர். அதற்கு தலைமையாக ஏதோ ஒரு பெரிய பரிசுத்த பிதாவை நியமித்தால், சரியாக வேதம் கூறுகிறது போல, நீங்கள் அங்குதான் அரிய மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை பெற்றுக் கொள்கிறீர்கள். இப்பொழுது அவர்கள் அதற்கு ஒரு லூத்தரன் ஊழியக்காரரைத் தலைவராகப் பெற்றுள்ளனர். இது இணையும் நேரமாயுள்ளதை நாம் காண்கிறோம். இப்பொழுதும் அதேக் காரியம், கம்யூனிஸம் மற்றுமுள்ள யாவும் ஒன்று சேர்ந்து இணைகின்றன; உலகில், சபையில் அது போன்றவை ஒன்று சேர்ந்து இணைக்கின்றன. 78 இயற்கையை கவனியுங்கள். இயற்கை, நீங்கள் அப்படியே இயற்கையை கவனிப்பீர்களேயானால், அதுவும் அதேக் காரியத்தையேச் செய்கிறது. இயற்கை தேவனுடைய அடையாளங்களின் நாள் காட்டியாயுள்ளது. நீங்கள் அதை அறிந்துள்ளீர்களா? இயேசு இயற்கையை கவனிக்கும்படி அவர்களிடம் கூறினார். சமுத்திரம் கொந்தளிக்கும், பாருங்கள், வெவ்வேறு காரியங்கள் சம்பவிக்கும், பல இடங்களில் பூமியதிர்ச்சி உண்டாகும், ராஜ்யத்திற்கு எதிராக ராஜ்யம் எழும்பி சண்டையிடுதல், வானத்தில் அடையாளங்கள், பூமியின் மேல் அடையாளங்கள், எங்கும் இந்த வருகையின் நேர அடையாளங்கள் காணப்படும். 79 மேகங்களை கவனியுங்கள். மேகங்கள் புயல் மழையைத் தோன்றப் பண்ணுவதற்கு முன்பு, அது எப்படி உண்டாகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? பல சிறு மேகங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய மேகத்தை உருவாக்குகிறது. இந்த சிறிய மேகத்தை காற்றடித்துச் செல்கிறது. இந்த மற்ற சிறு மேகத்தையும் காற்று அடித்துச் செல்கிறது. அவைகள் யாவும் ஒன்றினைந்து காற்று பலமாக வீச, அப்பொழுது அவை புயலை உண்டாக்குகின்றன. புரிகிறதா? அவைகள் புயலை உண்டாக்குவதற்கு முன்பு அவை ஒன்றாக இணைகின்றன; அவை இணைந்தாக வேண்டும். 80 குள்ள வாத்துகளும், பெரிய வாத்துக்களும் தங்கள் நாட்டை விட்டுச் செவதற்கு முன்பு ஒன்றாக இணைவதைக் கவனியுங்கள். பார்த்தீர்களா? அவைகள் ஒன்றாக இணைகின்றன. அவைகள் இந்த குளத்திலிருந்து அந்த குளத்திற்கு, இங்கிருந்து அங்கு, அவை யாவும் ஒன்று சேர்ந்து பறப்பதை உங்களால் காண முடியும். அவை பறப்பதற்கு ஆயத்தமாகவே ஒன்றிணைகின்றன. பாருங்கள், அது வெறுமென,... அது சுபாவமாயுள்ளது, தேவன் இயர்கையை சிருஷ்டித்தார், இயற்கை தேவனுடைய திட்டத்தின் மூலம் இயங்குகிறது. அது ஒரு பிரமாணமாய், எழுதப்படாத தேவனுடைய பிரமாணமாய் உள்ளது. அதாவது அவருடைய பிரமாணத்தின்படி இயற்கை செயல்படுகிறது. 81 ஒரு அடக்க ஆராதனையில் பேசும் செய்தியைப் போல, மரத்தின் சத்து பாதாளத்திலுள்ள மரத்தின் வேர்களை அடைந்து, வசந்த காலத்தின்போது உயிரோடெழும்பும் வரைக்கும் அங்கேயே தங்கியுள்ளது. அது தேவனுடைய பிரமாணமாய் உள்ளது. எந்த ஞானமும் அந்த சத்தை அங்கே கீழே கொண்டு செல்ல முடியாது; உங்களால் அதை கீழே அனுப்ப முடியாது, உங்களால் அதை வெளியே எடுத்து அனுப்ப முடியாது. தேவன் அதைச் செய்கிற விதத்தைக் காட்டிலும் வேறெந்த வழியுமே அதற்குக் கிடையாது. தேவன் பரிபூரண வழியை உடையவராயிருக்கிறார். ஆகையால் இலையானது உதிரும்போது, அவர் சத்தை பாதாளத்திற்கு அனுப்பி, அதை அங்கு ஒளித்து வைக்கிறார். யோபு, “நீர் என்னை பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறையும்” என்று கூறினது போல உள்ளது. புரிகிறதா? அது அங்கு செல்கிறது, ஏனென்றால் அது ஒரு இயற்கையின் பிரமாணமாயுள்ளது, அது பனிக்கு முன்பு அங்கு செல்ல வேண்டும். இலைகள் உதிரத் துவங்குவதைக் கவனியுங்கள். ஏன்? அது ஒரு இயற்கையின் பிரமாணமாயுள்ளது. 82 வாத்துகள் ஒன்று சேர்ந்து, அவைகள் ஒவ்வொன்றும் ஒரு தலைவனின் கீழ் ஒன்று சேருகின்றன. அவைகள் எப்படியோ தங்கள் தலைவனை அறிந்து கொள்ளும், அவைகள் அதை எப்படிச் செய்கின்றன என்று எனக்குத் தெரியாது, ஆனால் ஒரு குறிப்பிட்ட ஆண் வாத்து தங்கள் தலைவன் என்பதை அவைகள் அறிந்து கொள்கின்றன. அந்த தலைவனான ஆண் வாத்தைச் சுற்றி மற்ற வாத்துக்கள் ஒன்று சேர்ந்து ஆகாயத்தில் எழும்பி பறக்கின்றன. அது...அது அந்த குளத்தைவிட்டு அதற்கு முன்பு எங்கும் ஒருபோதும் சென்றதேயில்லை, ஆனால் அது நேராக லூசியானா அல்லது டெக்ஸாஸுக்கு நெல் வயலுக்கு பறந்து செல்லும். பாருங்கள், அவைகள் தங்களுடைய வீட்டை விட்டு பறந்து செல்வதற்கு முன், அவை அந்த ஆண்டுதான் பிறந்ததாயிருக்கும், ஆனால் அவை ஒன்றாக இணைகின்றன. ஆமென்! அங்குதான் உங்கள் காரியமே உள்ளது, தங்கள் தலைவனை சுற்றி ஒன்று சேருதல். 83 அதைக் குறித்து மனிதனுக்குள்ள தொல்லையென்னவெனில், அவன் தன் தலைவனை அறியாமலிருக்கிறான். ஆம், ஐயா. அவர்கள் ஒரு ஸ்தாபனத்தில் ஒன்று சேருகின்றனர், அவர்கள் ஒரு பேராயரை அல்லது ஒரு மனிதனை சுற்றி ஒன்று சேருகின்றனர். ஆனால் அவர்கள் தலைவரை, வார்த்தையில் உள்ள பரிசுத்த ஆவியானவரை சுற்றி ஒன்று சேருகிறதில்லை . புரிகிறதா? அவர்களோ , பரவாயில்லை, நான் சற்று மதவெறிகொண்டவனாகிவிடுவேன் என்று நான் பயப்படுகிறேன்; நான் தவறான பாதையில் சென்று விடுவேன் என்று நான் பயப்படுகிறேன்” என்று கூறுகிறார்கள். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. அந்த சிறு வாத்து தலைவனைப் பார்த்து, "அது தன்னுடைய சிறகுகளை வைத்துள்ள விதம் எனக்குப் பிடிக்கவில்லை. நான் அதைப் பின் தொடர வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினால் என்ன சம்பவிக்கும்? அது குளிரில் உறைந்து மரித்துப் போகும். அது போகும்போது, அது அந்தக் கூட்டத்துடன் சேர்ந்து பறக்கவில்லையென்றால், அப்பொழுது அது அங்கு மாட்டிக் கொள்ளும். அது தன்னை ஒன்றிணைக்கிறது, இயற்கை அதைச் செய்கிறது. 84 பெரிய வாத்துக்கள் தங்களை ஒரு தலைவனைச் சுற்றிலும் ஒருங்கிணைத்துக் கொள்கின்றன; அவைகளும் அதேக் காரியத்தைச் செய்கின்றன. 85 தேனீக்கள் மொய்ப்பதை நீங்கள் எப்போதாவது கண்டதுண்டா? தேனீக்கள் பறப்பதற்கு முன்பு தங்கள் ராணித் தேனியை சுற்றி ஒன்று கூடுகின்றன. அது உண்மை . ராணித் தேனி எங்கே செல்கிறதோ, அவைகளும் கூட செல்கின்றன. ஆம்! அவைகள் என்ன செய்கின்றன? அவைகள் பறப்பதற்கு முன்னர் ஒன்றாக இணைகின்றன. சரியாக; இயற்கை ஒவ்வொன்றுமே! 86 மீன்கள் வசந்தகாலம் முடிவுறுவதற்கு முன்னர் தங்களை இணைத்துக் கொள்கின்றன. சமுத்திரத்தில் நீங்கள் அவைகளைக் கண்டறிய முடியும்; அவைகள் பெரிய...நாம் "ஹம்பஸ்" என்று அழைக்கிற வஞ்சிரமீன் வகைகளில் ஒன்று. அந்தத் சமுத்திரத்தை சென்றடைவதற்கு முன்பு அவைகள் அங்கு வரும்போது, நீங்கள் அவைகளை ஆயிரக்கணக்கில் காணலாம். அவை உப்புத் தண்ணீர் கடலில் சுற்றி சுற்றி வருகின்றன. ஆனால் அவை உண்மையிலேயே உப்பில்லாத தண்ணீரைச் சேர்ந்தவை. இதோ அவை முட்டையிடும் பருவ காலத்தில் அந்த உப்புத் தண்ணீரை விட்டு வருகின்றன. அவை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கு சென்று முட்டையிடுகின்றன, அவைகள் முட்டையிட்டவுடனே மரித்துவிடுகின்றன. அவைகள் மரிக்கப் போகின்றன என்பதை அவைகள் அறிந்துள்ளன, எனவே நீங்கள் எக்காரணத்தைக் கொண்டு அவைகளை தடுத்து நிறுத்த முடியாது. அவைகள் ஏணித்தடைகள் அனைத்தையுமே மீறி குதித்து, அவை சாகப் போகின்றன என்று அறிந்தே அங்கு செல்கின்றன. ஆனால் இயற்கையின் பிரமாணம் அவைகளை அவ்வாறு செய்கிறது, அவைகள் அங்கு சென்று, துவாரத்தில் முட்டையிட்டு மரிப்பதை அறிந்துள்ளன. அதன்பின்னர் அந்த முட்டையிலிருந்து சிறு மீன் குஞ்சுகள் தோன்றுகின்றன, ஏதோ ஒன்று அவைகளை ஒன்றாக இணைக்கிறது, அதன்பின் அவை அங்கிருந்து கடலுக்குள் நீந்தி செல்கின்றன. அது இணைதலாயுள்ளதே! அது ஒரு பிரமாணமாயுள்ளதே! உங்களால் தேவனுடைய பிரமாணத்தை வெல்லவே முடியாது. 87 நாடுகள் உடைந்து கொண்டிருக்கின்றன, ஏனென்றால் நாம் காணும் இந்நேரத்தில் அவை உடைந்தே ஆகவேண்டும். நாம் நாடுகள் குழப்பமடையும் நிலையில் இருக்கிறோம். நாம் தேசங்கள் உறவை முறித்துக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் இந்த தேசம் கம்யூனிஸத்தில் விழுங்கப் பட்டுக் கொண்டிருப்பதை நாம் கண்டறிகிறோம்; இந்த ஒன்றும் கம்யூனிஸத்தினால் விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. நம்முடைய தேசமும் இங்கே கம்யூனிஸத்தில் ஊடுருவப்பட்டுள்ளது, அது கைப்பற்றிவிடும்! பாருங்கள், அது அதைச் செய்யும், அதைத் தடுத்து நிறுத்த வழியேயில்லை. ஏன்? உங்களால் தீத்துவைத் தடுத்து நிறுத்த முடியாத அதேக் காரணம்தான் இதற்கும் உள்ளது. ஜனங்கள் தேவனையும் அவருடைய வார்த்தையும் புறக்கணித்துள்ளனர். ஆம் ஐயா, ஆகையால் அவர்கள் அதைச் செய்யப் போகிறார்கள், நாம் அது செயல் முறையில் உள்ளதைக் காண்கிறோம். 88 சாதரணமாக நான் சில மணி நேரங்கள் எடுப்பது வழக்கம்; நான் ஏற்கனவே கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் பிரசங்கித்துவிட்டேன். புரிகிறதா? ஆனாலும் இவை எல்லாவற்றையும் எடுத்துரைக்க நான் விரைவாகப் பேசுகிறேன். நீங்கள் வீட்டிற்குச் சென்று இதை ஆய்ந்துப் படியுங்கள். | 89 கவனியுங்கள், அவர்கள் இப்பொழுது ஒன்றாக இணைத்துகொண்டிருக்கின்றனர். நீங்கள், “சகோதரன் பிரான்ஹாம் அது உண்மையா?” என்று கேட்கலாம். அவர்கள் அர்மகெதோன் யுத்தத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர்; அவர்கள் சரியாக அதைத்தான் செய்வார்கள். புரிகின்றதா? அவர்கள் இப்பொழுது அதற்காகவே இணைந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காகத்தான் நாம் ஐ.நா சபை மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் நாம் பெற்றுள்ளோம். மேற்கத்திய உலகம் கிழக்கத்திய உலகத்துக்கு விரோதமாக, கம்யூனிஸம் போன்றவைகளுக்கு விரோதமாக, அவையாவும் ஒன்றிணைந்து கொண்டிருக்கின்றன. சபைகள் ஒன்றிணைந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு காரியமும் ஒன்றிணைவதுபோல் தென்படுகிறது. இணைதல், தங்களை ஒன்றோடொன்று இணைத்துக் கொள்வதை நாம் காண்கிறோம். 90 தேசங்கள் ஒன்றாக இணையும் இந்த அடையாளங்களோடு, தேசங்களுக்கான அடையாளங்களோடு, நாம் இங்கே உலகில் பல இடங்களில் பூமியதிர்ச்சிகள் உண்டாவதைக் காண்கிறோம், வெவ்வேறு காரியங்கள் ஒன்றிணைந்து, உலகத்தை ஒன்று சேர்த்து, ஜனங்களை ஒன்று சேர்த்து, சபைகளை ஒன்று சேர்த்து, இந்த எல்லாக் காரியங்களையும் ஒன்று சேர்க்கிறது. இந்த எல்லா இணைப்புகளும் நடந்து கொண்டிருக்கையில், மற்றொரு இணைப்பும் நடந்து கொண்டிருக்கிறது. ஆமென். அதைத்தான் நான் இப்பொழுது உங்களிடத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 91 தேவன் தம்முடைய மணவாட்டியை ஒன்று சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவள் கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலுமிருந்து வந்து ஒன்று சேருகின்றாள். ஒரு இணையும் நேரம் உண்டு, அது இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. அவள் எதற்காக இணைந்து கொண்டிருக்கிறாள்? எடுத்துக் கொள்ளப்படுதலுக்காக. ஆமென்! தேவன் அவளை ஆயத்தப்படுத்திக் கொண்டு வருகிறார். ஆம் ஐயா, இணைதல்! அவள் எதனோடு இணைந்து கொண்டிருக்கிறாள்? வார்த்தையோடு! “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை." அவள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதுடன் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறாள். எந்த ஸ்தாபனம் அல்லது வேறு யார் என்னக் கூறினாலும் அதைப் பொருட்படுத்துகிறதில்லை. அவள் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறாள். அவள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறாள். ஏன்? அவள் மணவாட்டியாயிருக்கிறாள். அது உண்மை. அவள் தன்னை தன்னுடைய மணவாளனோடு இணைத்துக் கொண்டிருக்கிறார், பாருங்கள், மணவாளன் வார்த்தையாயிருக்கிறார். "ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்து, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்." 92 சபையும் மணவாட்டியும் வார்த்தையும் ஒன்றாகிக் கொண்டு வந்து முடிவில் வார்த்தையே மணவாளனின் கிரியைகளை செய்துகொண்டிருக்கிறது. ஆமென்! உங்களால் அதைக் காண முடிகிறதா? ஒரு இணைதல்! இனி ஒருபோதும், “சபையை சேர்ந்து கொள்ளுதல்" என்றல்ல; இதைக் குறித்து அதிகமாக என்றல்ல, ஆனால் ஒவ்வொருகாரியத்திலிருந்தும் விலகி ஓடி இயேசு கிறிஸ்துவண்டை கட்டப்படுங்கள். புரிகிறதா? இது இணையும் நேரமாயுள்ளது. தேவன், தமது மணவாட்டியை மறுபடியும் கொண்டு வந்து ஒன்றாக இணைக்கிறார்; சரியாக தம்முடைய வாக்குத்தத்தத்தின் வார்த்தைகளை இணைக்கிறார். 93 2 தொசலோனிக்கேயர், 2-ம் அதிகாரம்; 5-ம் அதிகாரம் இதைக் கூறுகிறது, "பூமியின் தூளில் நித்திரைபண்ணும் பரிசுத்தவான்கள் எழுந்திருப்பார்கள் என்றும், அப்பொழுது நாம் அவர்களோடு இணைக்கப்படுவோம் (அதாவது உயிரோடிருப்பவர், மரித்தோருடன்), நாம் அங்கு செல்வதற்கு முன்பே இணைக்கப்படுவோம். ஏனென்றால் மணவாட்டி அங்கு செல்லும்போது பரிபூரணமாயிருப்பாள். உயிரோடிருந்து தங்களை வார்த்தையுடன் இணைத்துக் கொண்டிருப்பவர்கள், ஏற்கெனவே சென்றவர்கள் அதைச் செய்தனர். எடுத்துக் கொள்ளப்பட்டு மேலே செல்வதற்கு முன்பு இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய இணைப்பாக ஆவார்கள். ஆமென்! 94 கம்யூனிஸம் எழும்ப வேண்டும், இந்த மற்றக் காரியங்களும் எழும்ப வேண்டும், சபையானது தன்னை எல்லா தேசங்களிலும் உலக ஆலோசனை சபைகள் சங்கத்துக்கென இணைத்துக்கொள்ள வேண்டும் மணவாட்டி தேவனுடைய வார்த்தையின் கீழ் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்வதற்கென, தேவன் அடையாளத்தையும் மற்றக் காரியங்களையும் அவர் தேசத்திற்கு அனுப்பி, சபைக்கு நிரூபிக்க வேண்டியிருப்பதால் அதை அனுப்பியுள்ளர். ஆமென். 95 தேவன்; இணையும் நேரம்! ஆம், ஐயா, இப்பொழுது, இப்பொழுது ஞாபகங்கொள்ளுங்கள், வார்த்தையின் திணைக்கில் சரியாக மறுபடி இணைப்பு ஒன்று உண்டு, (மறுபடியும் இணைக்கப்படுதல்), “பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்தை” மீண்டும் கொண்டு வருதல். திரும்ப கொண்டு வருதல்! அது இந்த நாளில் மாத்திரம் செய்யப்பட முடியும். அது செய்யப்படக் கூடிய ஒரே நேரம் தற்பொழுதேயாகும். அது வேறெங்கும் தாக்கப்படவில்லை; அவர்கள் ஸ்தாபன களியாட்டத்தின் பேரில் சென்று விட்டனர். ஆனால் இப்பொழுது, அது எந்த ஸ்தாபன களியாட்டத்தையும் சேர்ந்ததல்ல, ஏனென்றால் ஒவ்வொரு இனத்திலும், ஒவ்வொரு நிறத்திலும், ஒவ்வொரு கொள்கையிலும், கிறிஸ்துவின் கீழ் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் இணைத்து தேவனுடைய வார்த்தைக்கு மனிதர்களையும் ஸ்திரீகளையும் திருப்பும் நேரம் இதுவேயாகும். 96 சபைக்கான இணையும் நேரம்! இந்த ஸ்தாபனங்களால் தூரமாக சிதறடிக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் இணைத்தல்; ரோமாபுரியிலிருந்த நிசாயாவில் அவர்கள் முதலாம் ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டது முதற்கொண்டே, அவர்கள் லூத்தரன் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அவர்கள் மற்ற சபை ஸ்தாபனங்களையும் உண்டாக்கிக் கொண்டனர். அப்படி செய்ததன் காரணமாக, அவர்கள் ஒரு கோட்பாட்டை நியமித்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது. அப்பொழுது தேவன் வேறொன்றை அனுப்பினபோது, அவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆகையால் அது இதுவரைக்கும் கூடாமற்போயிற்று. தேவன் இந்தக் கடைசி நாட்களில், " பிதாக்களின் விசுவாசம் மணவாட்டிக்கு திரும்ப அளிக்கப்படுமென்று” வாக்களித்தார், அது இந்தவிதமாகத்தான் இருக்கும், அது இந்த நேரத்தைத் தவிர வேறெந்த நேரத்திலும் இருந்திருக்க முடியாது. வானத்திலிருந்து என்னே ஒரு அடையாளம் அக்கினி ஸ்தம்பமாக கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அடையாளங்கள் அற்புதங்களுடன் நம்மேல் தொங்கிக் கொண்டிருப்பதைப் பாருங்கள். அவர் நம்மிடம் பேசும்போது, அது சிறிது கூட பிழையற்றதாக இருக்க தவறினதில்லை . ஆமென்! ஆகையால் நாம் எங்கு நின்று கொண்டிருக்கிறோம் என்பதை நாம் காண்கிறோம். இணையும் நேரம்! 97 நாடுகள் இணைவதை நாம் காண்கிறோம், உலகம் இணைவதை நாம் காண்கிறோம், கம்யூனிஸம் இணைவதை நாம் காண்கிறோம்; அவரும் அவருடைய சபையும் ஒன்றாகுமளவிற்கு தேவன் தம்மை தம்முடைய மணவாட்டியோடு இணைத்துக் கொள்வதை நாம் காண்கிறோம். அல்லேலூயா! அங்குள்ள கூர்நுனி கோபுரத்தைப் போல, உண்மையே! தங்களை ஒன்றாக இணைத்துக் கொள்ளுதல்; தேவன் இணைகிறாரே! ஏன்? ஆதி சபையின் காலத்திற்குப் பிறகு, எந்த ஒரு காலத்திலும் அவர்கள் நாம் இன்றைக்கு பார்த்துக் கொண்டிருக்கிற காரியங்களை ஒருபோதும் கண்டதில்லை. தேவன் ஏழு தூதர்களை பரலோகத்திலிருந்து கீழே அனுப்பி நமக்கு ஒரு அடையாளத்தை கொடுத்ததன் மூலம், ஏழு முத்திரைகளைத் திறந்தபோது, அது சாத்தியமாயிற்று. அவர் தமது பரிசுத்த ஆவியை அனுப்பி, ஸ்தாபனங்களால் சிதறப்பட்ட வார்த்தையை மீண்டும் கொண்டு வந்து அதை தேவனுடைய வார்த்தையுடன் இணைக்கச் செய்தார். 98 இயேசு, “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்" என்று கூறினார். மணவாட்டி மறுபடியும் வார்த்தையோடு இணைத்தல், வார்த்தை தேவனாயிருக்கிறது. சபையும் வார்த்தையும், சபையும் கோட்பாடும் அல்ல; சபையும் வார்த்தையும்; மணவாட்டியும் வார்த்தையும் ஒன்றாக இணைக்கப்படுதல். ஓ, என்னே ! என்ன ஒரு...எதைத் திரும்பளித்தல்? லூத்தரினுடைய குழுவினால் சிதறடிக்கப்பட்ட மூல பெந்தேகோஸ்தே பிதாக்களின் விசுவாசத்தைப் பாருங்கள், லூத்தர் தாமே அதைச் செய்யவில்லை; லூத்தர் அல்ல, வெஸ்லி அல்ல, அந்த பெரிய ஸ்தாபகர்கள் அல்ல. ஆனால் அவர்கள் சென்ற பிறகு சபை ஒன்று எழுப்பப்பட்டது, அவர்கள். அவர்கள் அப்பொழுது என்ன செய்தனரென்றால், அவர்கள் ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அவர்கள் கோட்பாடுகளையும் மற்றவைகளையும் ஏற்றுக் கொண்டு அகன்று சென்றுவிட்டனர். இன்றைக்கு அவர்களைப் பாருங்கள், அவர்கள் இப்பொழுது உலக சபைகள் ஆலோசனை சங்கத்தில் சேர்ந்துள்ளனர். 99 இப்பொழுது, நீங்கள் பாருங்கள், ஆனால் இந்த கடைசி நாட்களில், நீங்கள் பாருங்கள், இதற்கு முன்பு ஒருபோதும் சம்பவித்திராத காரியங்கள் இப்பொழுது சம்பவித்துக் கொண்டிருக்கிறதை நாம் காண்கிறோம். பாருங்கள், அது தேவனுடைய அடையாளமாய் உள்ளது, இந்த இணைதல் யாவுமே காலத்தின் அடையாளமாயுள்ளது. இப்பொழுது, நாம் அதை கவனமாகப் பார்த்து, அதை அறிந்து கொண்டோம் என்றும் நிச்சயத்தை உடையவர்களாயிருக்க விரும்புகிறோம். அவர்கள் ஸ்தாபனங்களுக்காக உண்மையான வார்த்தையை விட்டுவிட்டு... வார்த்தையை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக வெவ்வேறு மனிதர்களின் கருத்துகளையும், கோட்பாட்டையும் ஏற்றுக் கொள்கின்றனர். 100 வெளிப்படுத்தல் 10-ம் அதிகாரம், “ஏழாம் தூதனுடைய செய்தி” என்று உரைத்துள்ளது. இப்பொழுது நினைவிருக்கட்டும், அது ஏழு எக்காளங்களின் போது, ஏழு தூதர்கள் ஏழு எக்காளங்களை ஊதுகின்றனர். அதற்குத்தான் நாம் அடுத்தபடியாக வந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஞபாகங்கொள்ளுங்கள், அது பிரத்தியேகமாய், "தூதனின்...” என்று கூறப்பட்டுள்ளது. ஏழாம் தூதனின் எக்காளம் அல்ல, ஆனால் “ஏழாம் தூதனுடைய செய்தி” பாருங்கள், எக்காளத் தூதன் அல்ல, செய்தி தூதனே! பாருங்கள், தூதன் எக்காளம் மாத்திரம் ஊதினான், அந்த ஏழாம் தூதன், எக்காள தூதன். ஆனால் இது, "ஏழாம் தூதனின் செய்தியின் நாட்களில்” என்று கூறுகிறது; பாருங்கள், அவனுடைய செய்தி நிறைவேறும்போது, பாருங்கள், அது சபைக்கால செய்தியாயுள்ளது. இந்த முறை அவர்... செய்தி, எக்காளம் அல்ல, "தேவ ரகசியம் (அது வேதத்தில் எழுதப்பட்டுள்ளது) நிறைவேறும்." 101 இப்பொழுது நாம் எந்த நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பாருங்கள்! அந்த முத்திரைகளைப் பாருங்கள்; அது சிதறப்பட்டிருந்த தேவனுடைய வார்த்தையை எப்படி கொண்டு வந்து சேர்த்தது. இது லூத்தரும் மற்ற யாவரும், அந்த மகத்தான சீர்த்திருத்தக்கார் செய்தவைகளை வேதத்தில் எடுத்துக்காட்டி, அவர்கள் எங்கே இருப்பார்கள் என்றும், ஒவ்வொரு மனிதனையும் சரியாக அவனுடைய இடத்தில் வைத்து, அவன் என்ன செய்வான் என்றும், சபைக்கு என்ன சம்பவிக்கும் என்றும்; அவன் என்ன செய்வான் என்றும், சபைக்கு என்ன சம்பவிக்கும் என்றும்; அவன் விட்டுவிட்ட இந்த எல்லாக் காரியங்களையும் எடுத்துக் கூறினது. அதன்பின்னர் கடைசி நாளில், நாம் அதைக் குறித்து ஒன்றுமே அறியாதிருந்தபோது, ஒரு குறிப்பிட்டக் காரியம் சம்பவிக்கும் என்று நமக்கு முன்னறிவித்தது. செய்தித்தாள்களும் மற்றவைகளும் கூட அதை வெளியிட்டன. அவர் இறங்கி வந்து அதை வெளிப்படுத்தி, எல்லா இரகசியங்களையும் ஒன்றாக இணைக்கிறார். ஆமென்! சகோதரனே, அது எனக்கு வியப்பார்வத்திற்குரியதாய் உள்ளது. அதாவது, என்னைப் பொறுத்த வரையில் வார்த்தையை வரிசைப்படுத்துகிறது. ஆமென்! ஜனங்கள் என்ன - என்ன கூறுகிறார்கள், நினைக்கிறார்கள் என்று நான் கவலைப்படுகிறதில்லை, அது உண்மை , ஆனல் எனக்கு அது சத்தியமாயுள்ளது. 102 பாபிலோனிலிருந்து வந்த சாஸ்திரிகள், “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவர் இப்பொழுது பூமியில் இருக்கிறார். நாங்கள் அவரைக் கண்டறிய வேண்டும்” என்று கூச்சலிட்டது போன்றே. அது உண்மை . வருவதற்கு அவர் மிகவும் அருகாமையிலிருக்கிறார் என்று நான் விசுவாசிப்பதால், "இதோ, மணவாளன் வருகிறார்! நான் நள்ளிரவு சத்தத்தைக் கேட்கிறேன்," என்று என்னால் கூற முடியும். ஆமென்! நாம் முடிவின் நேரத்தில் இருக்கிறோம். நாம் அந்த வேளையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கவனியுங்கள். புரிகிறதா? 103 என்னே ஒரு நாள்! என்னே ஒரு நேரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இந்த மகத்தான தேவரகசியம் முடிந்துவிட்டது. தேவத்துவத்தில் விளக்கப்பட்டு, அது என்ன என்பதைக் காண்பித்துள்ளது; எப்படியாய் இந்த சிறு தத்துவங்கள் புறப்பட்டு சென்று அவரை இதுவாகச் செய்தன, ஒருவர் அவரை இதுவாக செய்திருந்தார், மற்றொருவர் அவரை அதுவாகச் செய்திருந்தார். ஆனால் கர்த்தருடைய தூதன் இறங்கி வந்து, அவர்களுடைய எல்லா தத்துவங்களையும் காண்பித்து, அதிலிருந்து சத்தியத்தியத்தை வெளியே இழுத்து, அதை நமக்களித்தார். அது அவ்வளவு பரிபூரணமாக அமைந்துள்ளது. நீங்கள் வேறு எந்த வழியிலும் செல்லவே முடியாது. அதுதான், அதுதான் அவராய் உள்ளது. பாருங்கள், சர்ப்பத்தின் வித்து, ஜனங்களிடையே இரகசியமாய் அமைந்திருந்து வந்த இந்த எல்லா-எல்லா வெவ்வேறு காரியங்கள். புரிகிறதா? அது என்னவாயிருக்கிறது? அவர்... இது என்னத்திற்கு அடையாளமாயுள்ளது? இணைதலுக்கே! 104 அவர் மல்கியா 4-ல் என்னக் கூறினார்? திரும்பளிப்பதாக! மூல பெந்தேகோஸ்தே விசுவாசத்திற்கு திரும்பளிக்க, ஜனங்களை அதே பெந்தேகோஸ்தே செய்திக்கு, அதே பெந்தேகோஸ்தே அடையாளத்துக்கு, அதே பெந்தேகோஸ்தே அத்தாட்சிக்கு திருப்புதல். அதே தேவன், அதே வல்லமை, அதே உபதேசம், ஒவ்வொரு காரியமும் சரியாக அதேவிதமாக, தமஸ்குவுக்குப் போகும் வழியில் சவுலை வீழ்த்தின அதே அக்கினி ஸ்தம்பத்தின் ரூபகாரப்படுத்துதல் இன்றைக்கு நம் மத்தியில் இருந்து கொண்டு, அவர் அந்நாளில் செய்த அதேக் காரியத்தை இப்பொழுது செய்து கொண்டு வருகிறது. இணைதல்! 105 நாடுகள் இணைவதை நாம் காண்கிறோம், உலகம் இணைவதை நாம் காண்கிறோம், சபைகள் இணைவதை நாம் காண்கிறோம். மணவாட்டி இணைவதை, வார்த்தையோடு இணைவதை நாம் காண்கிறோம். ஏன்? வார்த்தை தேவனாயுள்ளது. வார்த்தையானது...மணவாளன் (வார்த்தையாயிருக்கிறார்), மணவாட்டி (வார்த்தையைக் கேட்பவளாயிருக்கிறாள்), அவர்கள் ஒரு இணைப்பில் ஒன்று சேருகின்றனர். அவர்கள் ஒரு விவாகத்தைப் போல இணைகின்றனர். பாருங்கள், அவர்கள் ஒரு விவாகத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர், அவர்கள் - அவர்கள் ஒருவராகின்றனர். வார்த்தை நீங்களாகிவிடுகிறது, நீங்கள் வார்த்தையாகிவிடுகிறீர்கள். இயேசு, “அந்த நாளிலே நீங்கள் அதை அறிவீர்கள். பிதா என்னவாகவெல்லாமாக இருக்கிறாரோ, அவை அனைத்தும் நானாக இருக்கிறேன்; நான் என்னவாகவெல்லாமாக இருக்கிறேனோ, அவையனைத்தும் நீங்களாக இருக்கிறீர்கள். நீங்கள் என்னவாவெல்லாமாக இருக்கிறீர்களோ, அவையனைத்துமாக நான் இருக்கிறேன். நான் என் பிதாவிலும், பிதா என்னிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்” என்றார். புரிகிறதா? "அந்த நாளிலே” எந்த நாளிலே? இந்த நாளிலே! மறைக்கப்பட்ட தேவனுடைய மகத்தான இரகசியங்கள் வெளிப்படுவதை நாம் கண்டறிகிறோம். அது எனக்கு எவ்வளவு பிரியம்! 106 விஞ்ஞானத்தையும், வார்த்தையையும் எப்படியாய் அவர்கள் இன்றைக்கு ஒப்பிடுவது போல முன்பு ஒப்பிட முடியாமலிருந்தது. அவர்கள் அதை அதற்கு முன்பு ஒப்பிட முடியவில்லை. இப்பொழுது அவர்களால் அதை செய்ய முடிகிறது. 107 கவனியுங்கள், அவர், “வானத்தில் அடையாளங்கள், வானத்தில் அடையாளங்கள்” என்றார். விஞ்ஞானம், ராஜ்யத்தின் அடையாளங்கள்; இன்றைக்கு அவர்களுக்கு வானத்தில் பெரிய அடையாளங்கள் உண்டு, அவர்களுக்கு விண்வெளி வீரர்கள் மற்றும் ஒவ்வொரு காரியமும் உண்டு. ஆனால் இந்த விண்வெளி வீரர்கள் உலக விஞ்ஞானத்திற்கு என்ன செய்கிறார்கள்? அது அவர்களுக்கு பயத்தையே கொண்டு வருகிறது. எந்த நேரத்தில் அவர்கள் விண்வெளிக்குச் சென்று, அங்கிருந்து அணுகுண்டுகளைப் போட்டு நம்மை அழித்துவிடுவார்கள் என்று அவர்களுக்கேத் தெரியாது. புரிகிறதா? இப்பொழுது அப்படிப்பட்ட அடையாளங்களை அவர்கள் பெற்றுள்ளனர், வானத்தில் பயங்கரமான காட்சிகள். பார்த்தீர்களா? அவர்கள் அணு சக்தி ஏவுகணைகள் மற்றும் எல்லாவிதமான அடையாளங்களையும் பெற்றுள்ளனர். 108 அன்றொரு நாள் அவர்கள், இனிமேல் எந்த அணு குண்டுகளையும் வெடிக்கப்போவதில்லை என்று இந்த - இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். ஆனால் இப்பொழுது அவர்கள் கடலின் அடியிலும் பூமிக்கடியிலும் அணுகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர். பார்த்தீர்களா? அவர்கள் ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு, “நீங்கள் அதை செய்ய மாட்டீர்கள் என்று நீங்கள் கூறினால் நாங்கள் இதை செய்யமாட்டோம், (ஆனால் நாங்கள் வீட்டிற்கு திரும்பிச் சென்று அதை இந்தவிதமாகச் செய்வோம்; நீங்களும் அங்கு சென்று அதேவிதமாக செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்)” என்கின்றனர். பார்த்தீர்களா? எந்த ஒரு காரியமும் இல்லை , அது...அவர்களுக்கிடையே எந்த நம்பிக்கையும் இல்லை, அங்கே ஒரு காரியமும் இல்லை. நீங்கள்....புரிகிறதா? ஒவ்வொருவரும் மற்றவரைக் கண்டுப் பயமடைந்துள்ளனர். அது ஒரு பயமுள்ள அடையாளமாயுள்ளது. 109 விஞ்ஞானமும், மனிதரும், நாடுகளும் வானத்தில் பயத்தை விளைவிக்கும் அடையாளத்தை தோன்றப் பண்ணியுள்ளன. அது முற்றிலும் உண்மை . இப்பொழுது, ஒருவரைப் பார்த்து ஒருவர் பயப்படுதல். வானத்தில் ஒரு அடையாளம் கொடுக்கப்பட்டுள்ளது... இப்பொழுது பாருங்கள், அவர்கள் வானத்தில் பயத்தை தோற்றுவிக்கும் ஒரு அடையாளத்தைப் பெற்றுள்ளனர். அது ஒரு மனிதன் ஒரு விண்வெளி வீரனாயிருத்தல்; அவன் விண்வெளிக் கப்பலில் அணு சகிதி ஏவுகணையைக் கொண்டு சென்று, அதைப் போட்டு முழு நாட்டையே அழித்து விட முடியும். விண்வெளி வீரன் எழும்பி, அங்கே நிற்கிறான். அவர்கள் அப்படிச் செய்வதைத் தடுக்க ஒன்றுமேயில்லை, அவர்கள் அதைச் நிச்சயம் செய்ய முடியும். அவர்கள்...அவர்கள் விரும்பும் எந்த நேரத்திலும் அதைச் செய்ய முடியும். அவர்கள் விரும்பினால், அவர்களால்... இப்பொழுதிலிருந்து பதினைந்து நிமிடங்களுக்குள்... இதை தவிடு பொடியாக்கி விட முடியும். ஒருவரால் என்ன செய்ய முடியுமோ, மற்றவராலும் கூட அந்த விதமாகவே செய்யக் கூடும். ஆகையால், அவர்கள் ஒரு அடையாளத்தைப் பெற்றிருப்பதை நீங்கள் பாருங்கள், ஆனால் அந்தவிதமான அடையாளம் அவர்களுக்கு பயத்தை தோன்றுவிக்கிறது. 110 அவர்கள் ஒன்றிணைந்து, தங்களுடைய வல்லமைகளை ஒன்று திரட்டுகின்றனர். சுயாதீன உலகம், அது தன்னுடைய வல்லமையை ஒன்று திரட்டிக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸம் ருஷியாவுடன் தன்னுடைய வல்லமையை ஒன்று திரட்டுகிறது. ஒவ்வொருவரும் அப்படியே செய்கின்றனர்; ஆனால் ஒருவர் மற்றவரைக் குறித்து பயமடைந்துள்ளனர். பாருங்கள், அது ஒரு பயமுள்ள அடையாளமாயுள்ளது. அது உண்மை . அது ராஜ்ய சம்மந்தமான அடையாளங்கள் மற்றுமுள்ள காரியங்களாயுள்ளன. 111 ஆனால் சபையானது ஒரு வானத்தின் அடையாளத்தைப் பெற்றுள்ளது. ஒரு விண்வெளி வீரர்! ஆமென்! இயேசு கிறிஸ்து அக்கினி ஸ்தம்ப உருவில் உள்ளார்; அதாவது அவர் பழைய ஏற்பாட்டில் அவ்வாறு இருந்தார், அவர் தமஸ்குவுக்குப் போகும் வழியில் அங்கே சவுலை சந்தித்தபோது, அவர் அங்கே அவ்வாறு இருந்தார், அதே இயேசு இன்றைக்கு இங்கே இருக்கிறாரே! அது என்ன செய்கிறது? அது பயத்தைக் கொண்டு வருகிறதா? அது அன்பைக் கொண்டு வந்து ஒருவரையொருவரை இணைக்கிறது. ஆமென்! ஒருவருக்கொருவருக்கான ஒரு உணர்வு. அது தேவனுடைய அன்பைக் கொண்டு வந்து, நம்மை இணைத்து, நம்மை கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக கொண்டுவந்து, ஒரு மணவாட்டியாக ஒன்று படுத்துகிறது. அதைத்தான் அது இப்பொழுது செய்து கொண்டிருக்கிறது, இந்த பெரிய இணைப்பை... 112 அவர்கள் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஒரு சாரார் மற்றொரு சாராரிடம் சண்டையிட இங்கே இணைகின்றனர், ஒரு குழுவினர் மற்றொருவரோடு சண்டையிடவே இங்கே இணைகின்றனர். இங்கே சபையானது அவர்களுக்கு நடுவில் நின்று கொண்டிருக்கிறது. என்ன சம்பவிக்கிறது என்பதை நீங்கள் கவனியுங்கள், அது அவர்களோடு இணைக்கும். அது முற்றிலும் உண்மை . ஆனால், இப்பொழுது, அது பயத்தையும், எண்ணக் குலைவுகளையும் கொண்டு வருகிறது என்பதை நாம் கண்டறிகிறோம். 113 ஆனால் சபையானது, மணவாட்டி, ஒரே தேவனால், ஒரே ஆவியின் கீழ், தேவனுடைய ஆவியின் கீழ் தேவனுடைய ஒரு பரிசுத்த இணைப்பில் தேவனுக்கு ஒரு பரிசுத்த மணவாட்டியாயிருக்கும்படிக்கு இணைக்கப்படுகிறாள். அது உண்மை , எல்லாம் சேர்ந்து, சரீர இணைப்பு. சரீரமோ ஒரு மணவாட்டியாக காத்திருக்கிறது; அது மணவாட்டியாயிருக்கிறபடியால், நாம் நம்மை மணவாட்டியென்று அழைக்கிறோம். ஏனென்றால் மணவாட்டியின் இணையும் நேரம், சபையானது ஒன்று சேர்ந்து கொண்டிருக்கிறது. அது நாம் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து செல்லக் கூடாதபடி நம் மத்தியில் அன்பை சிருஷ்டிக்க வேண்டும். அது உண்மை. நாம் அப்படியே...நீங்கள் ஜெபம்பண்ண ஜனங்களைக் கெஞ்ச வேண்டியதில்லை, நீங்கள் தேவனை ஆராதிக்க ஜனங்களைக் கெஞ்ச வேண்டியதில்லை. அவர்கள் சரியானதை செய்யும்படிக்கு நீங்கள் கெஞ்ச வேண்டியதில்லை. அவர்கள் வேறெதன்பேரிலும் இல்லாமல், அவரோடு அவ்வளவு அன்பாயிருப்பார்கள். 114 ஒரு இளம் பெண்ணைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு அழகான பெண் அழகான வாலிபன் மீது மிகவும் காதல் கொண்டு அவனை மணம் புரிந்து கொள்ளப் போகிறாள் என்றால், அவளுக்கு தன் சொந்த ஜீவனைக் காட்டிலும் அது மேலானதாக இருக்கும். அவள் அவனை மணம் புரிந்து கொள்ளப் போகிறாள் என்பதை அவள் அறிந்திருக்கிறாள். மணநாள் நெருங்கி வரும்போது, அவள் “சுற்றி நடந்து கொண்டு உணர்ச்சிவசப்பட்டவளாயிருப்பாள்” என்பதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். புரிகிறதா? அவள் ஒவ்வொரு காரியத்தையும் ஆயத்தப்படுத்திக் கொண்டிருப்பாள். அவள் முழுவதுமாக அவனுக்கு தன்னை அர்ப்பணிக்கிறாள். அது உண்மை. அவனுக்குப் பிரீதியாயிருக்கிற ஒவ்வொரு காரியத்தையும் அவள் செய்ய விரும்புகிறாள். இன்றைக்கு சபையும் அந்த விதமாகவே இருக்க வேண்டும், அதாவது நம்முடைய ஜீவன் கிறிஸ்துவினூடாக தேவனுக்குள் மறைக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்பட வேண்டும். 115 நான் உங்களுக்கு இங்கு போதித்துக் கொண்டுவந்த காரியமே உங்களை இந்த அடையாளங்களையும், வித்தியாசமான மற்றக் காரியங்கள் சம்பவிக்கிறதையும் எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது அவைகளை விவரித்துக் கூற எனக்கு நேரமில்லை; கர்த்தருக்குச் சித்தமானால் மற்றொரு செய்தியில் நாம் பார்ப்போம். ஆனால் இன்னும் ஒரு சிறு காரியம் சபையில் குறைவாயுள்ளது. நாம் அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் சரியாக இப்பொழுது அதனுடைய விளிம்பில் இருக்கிறோம். புரிகிறதா? நாம் அதைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறோம்....நீங்கள் அதைச் செய்யத்தான் வேண்டும். நீங்கள் அதைச் செய்யவில்லையென்றால், அவ்வளவுதான், நீங்கள் அதைச் செய்ய வேண்டும். ஏனென்றால் பாருங்கள், இணையும் நேரம் சமீபமாயுள்ளது, ஏனென்றால் தேவன் சபையை ஒரு ஒரு எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு, மகத்தானஇணைப்பிற்கான கலியாணத்திற்குச் செல்ல ஒன்று சேர்த்து ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்: தேவனும் மனிதனும் நித்தியமாக இணைவார்கள், காலவரையறையுள்ள சிருஷ்டிகள் நித்தியத்துடன் இணைந்து விடுவார்கள். 116 அது பூமியில் மனுஷ குமாரன் ரூபத்தில் ஒரு முறை நடந்தது. அவர் மற்ற மனிதரை இந்த அதே வல்லமையோடு இணைக்க, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்காக ஒரு வல்லமையைக் கொண்டு வர தம்முடைய ஜீவனை அளிக்க வேண்டியதாயிருந்தது. இப்பொழுது சபையானது கிறிஸ்துவின் சரீரத்தோடு தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது. அது தன்னை எல்லா விலங்குகளிலிருந்தும் விடுவித்துக் கொண்டு, ஆயத்தமாக்கி, ஒன்றாக இணைந்து வருகிறது., அன்பு, சந்தோஷம், பரிசுத்த ஆவி அவர்கள் மத்தியில் அசைவாடி வருகிறார். என்னே ஒரு நேரம். 117 குள்ள வாத்துக்கள் ஆயத்தமாவதையும் நாம் காண்கிறோம். பெரிய வாத்துகள் ஆயத்தமாவதை நாம் காண்கிறோம். நாம் மிருகம். தேனீக்கள் ஆயத்தமாவதை காண்கிறோம், மேகங்கள் மழைக்காக ஆயத்தமாவதை நாம் காண்கிறோம். நாம் ஒவ்வொரு காரியத்தையும் காண்கிறோம்; அது எப்படி அந்த பெரிய உந்துதலுக்கென்று அவை தங்களை இணைத்துக் கொள்கின்றன. நாம் உலக நாடுகள் சங்கத்தையும், தேசங்கள் ஒன்று சேர்வதையும், கம்யூனிஸத்தில் அவைகள் தங்களை இணைத்துக் கொள்வதையும் காண்கிறோம். அவைகள் தங்களை இங்கே மேற்கத்திய உலகத்தில் இணைத்துக் கொள்வதை நாம் காண்கிறோம். சபை தன்னை இணைத்துக் கொள்வதையும், இந்த மற்ற எல்லாவற்றையும் நாம் பார்க்கிறோம். ஆகையால் அது முற்றிலும் கூடாததாய், அதாவது வேறெந்த நேரத்திலும் இந்த விதமாய் இருந்திருக்க முடியாது; இது இருபது ஆண்டுகளுக்கு முன்பு இப்படி இருந்திருக்க முடியாது. இந்த விதமாய் இருந்திருக்க முடியாது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த விதமாய் இருந்திருக்க முடியாது, இது இப்பொழுது இருக்க வேண்டியதாயுள்ளது. பாருங்கள், ஏனென்றால் இந்தக் கொள்கைகளும், மற்ற காரியங்களும் இந்த இடத்தை இதற்கு முன் வந்தடைந்திருக்கவில்லை. 118 இப்பொழுது விழித்தெழுங்கள்! உங்களையே உடனே குலுக்கிக் கொண்டு நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நோக்கிப் பாருங்கள். நாம் எங்கே இருக்கிறோம்? அந்த வான சாஸ்திரிகளைப் போல, நாம் அவருடைய வார்த்தையின் வரிசையில் சரியாக இருக்கிறோம், கர்த்தருடைய வெளிச்சம் நம்முடைய பாதையில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமை உண்டாவதாக. நாம் அன்பு கூருகிற இயேசு கிறிஸ்துவை நமக்குத் தந்தருளி, நம்மை இந்த ஸ்தானத்திற்கு கொண்டுவந்துள்ள தேவனுக்கு மகிமையுண்டாவதாக. நாம்...நாம்அவருடைய ஜனங்களாய், அவருடைய இரத்தத்தின் கிரயத்தினால் கொள்ளப்பட்டவர்களாயிருக்கிறோம். 119 இணையும் நேரம் வரும்போது, நாம் அவருடைய ஆவியின் கட்டுகளில் ஒருவரோடு ஒருவர் இணைக்கப்படுகிறபடியால், நாம் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். நாம்...அது அவருடைய ஆவியாயிருக்குமா? நிச்சயமாக, அது அவருடைய ஆவியாய் உள்ளது. அது ஏன்? அது அவருடைய வார்த்தையாயுள்ளது, அவர்...அது வார்த்தையின் ஆவியாய் உள்ளது. வாக்குத்தத்தின் ஆவி உங்கள் மேல் வரும்போது, தன்னை இங்கே காண்பித்து ரூபகாரப்படுத்தும்போது, அது அதே ஆவியாய் உள்ளதா? அது வனாந்திரத்தில் மோசேயுடன் இருந்த ஒருவராய் இருந்தது. அது இயேசு கிறிஸ்துவின் மேலிருந்த ஒருவராயிருந்தது! அவரே தமஸ்குவிற்குப் போகும் வழியில் சவுலைச் சந்தித்த ஒருவராய் இருக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்! அவர் அதேக் காரியத்தைச் செய்கிறாரே! 120 நாம் தேசங்கள் ஒன்று சேர்வதைக் காண்கிறோம், நாம் சபைத் தலைவர்கள் ஒன்று சேர்வதைக் காண்கிறோம், நாம் கம்யூனிஸம் ஒன்று சேர்வதைக் காண்கிறோம், நாம் கொள்கைகள் ஒன்றிணைவதைக் காண்கிறோம், நாம் இந்த எல்லாக் காரியங்களையும் காண்கிறோம்; இப்பொழுது நாம் மணவாட்டி வார்த்தையோடு இணைவதைக் காண்கிறோம். ஓ, என்னே! இது மரித்த பரிசுத்தவான்கள் உயிரோடெழுந்து, உயிரோடிருப்பவர்களோடு இணைந்து, மேலே சென்று, இயேசு கிறிஸ்துவுடன் நித்தியமாக இணைந்திருக்கும்படியான நேரமாய் உள்ளது. 121 நாம் ஒவ்வொருவரும் இன்றிரவு கிறிஸ்துவுடன் இணைய தேவன் நமக்கு உதவி செய்வாராக, நாம் நமக்கு இருக்கிற நம்முடைய ஒவ்வொரு காரியத்தையும், நாம் பெற்றுள்ள ஒவ்வொரு காரியத்தையும், நம்முடைய ஆத்துமா, சரீர, சிந்தை முழுவதையும் இயேசு கிறிஸ்துவிற்கு சமர்ப்பித்து, அந்த இணைப்பின் நேரத்திற்காக எதிர் நோக்கியிருப்போமாக. தேவ எக்காளம் தொனித்து, இனி காலம் செல்லாமற்போகும்போது, காலை நித்தியமாயும், பிரகாசமயும், அழகாயும் விடியும்போது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர் உயிரோடெழுந்து, (உயிரோடிருக்கும் மணவாட்டியுடன்) ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொள்ளப்பட்டு, மறுகரையில் ஒன்றாகக் கூடும்போது. 122 இணைப்பை நோக்கிப் பாருங்கள்! தேவன் தம்முடைய வார்த்தையோடு சபையை இணைத்துக் கொண்டிருக்கிறார், வார்த்தையை சபையோடு இணைத்து, இரண்டும் ஒன்றாகி, “இதை உரைத்தால், அது சம்பவிக்கும். இதை செய் என்றால் அது தான் இது; இது உங்களுக்கு முன்னால் நான் இருந்து, என்னை நிரூபிப்பதாகும்; இது நான் உங்களோடு இருப்பதாகும்.” சரி. 123 எக்காளம் தொனிக்கும் நேரம் இப்பொழுது வருகிறதை நாம் கண்டறிகிறோம், முன்பு நித்திரையடைந்துள்ள அந்த பரிசுத்தவான்கள், அவர்கள் நம்மையல்லாமல் பூரணராக முடியாது; அவர்கள் நம்மை சார்ந்திருக்கிறார்கள் (எபிரெயர் 11); அவர்கள் ஒன்று சேரும்போது, அவர்கள் உயிரோடிப்பவர்களோடு இணைகின்றனர். சபையானது வார்த்தையுடன் இணைகிறது, அப்பொழுது சபையும் வார்த்தையும் ஒன்றாக இணைந்து, ஒன்றாகி விடுகின்றனர். மரித்த பரிசுத்தவான்கள் உயிரோடிருக்கும் பரிசுத்தவான்களுடன் இணைந்து ஒன்றாகிவிடுகின்றனர்; எல்லோரும் ஒன்றாக மேலே சென்று, ஆட்டுக் குட்டியானவருடைய கலியாணவிருந்துக்கென்று கிறிஸ்துவுடன் இணைகின்றனர். 124 இது இணையும் நேரமாய் உள்ளது, அடையாளங்கள் எங்கும் பறந்து கொண்டிருக்கின்றன. அடையாளங்கள் தேசங்களில் உள்ளன, அடையாளங்கள் கம்யூனிஸத்தில் உள்ளன, அடையாளங்கள் மேற்கத்திய உலகத்தில் உள்ளன, அடையாளங்கள் உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தில் உள்ளன. இன்றிரவு அடையாளம் இங்கே பரிசுத்த ஆவியின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. அதை தேவனுடைய வார்த்தை உறுதிபடுத்தி, சத்தியம் என்று நிரூபிக்கிறது. ஆமென்! இணையும் நேரம்! இணையும் நேரத்தின் அடையாளம்! நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. 125 கர்த்தராகிய இயேசுவே, இந்த சந்ததியில் நீர் வரக்கூடும் என்றும், எக்காளம் தொனிக்கும்போது நாங்கள் உயிருடன் நின்று கொண்டிருக்க வகையுண்டு என்று நடுத்தர வயதுள்ளவனாகிய நான் காணும்போது, என் எளிய இருதயம் களிப்பினால் துள்ளுகிறது. “அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.” தேவனாகிய கர்த்தாவே! 126 ஒரு நிமிஷத்தில், இமைப் பொழுதில் என்ன நடக்கிறதென்று உலகம் அறியாதிருக்கும்போது, திடீரென்று உம்மோடு இணைவதற்கென, ஏற்கெனவே கடந்து சென்ற உமது அன்பானவர்கள் உமக்கு முன்பாக பிரதியட்சமாவார்கள் என்பதை இங்கு நின்று கொண்டு எண்ணிப்பார்க்கிறோம். அப்பொழுது நாங்கள் ஒரு நிமிஷத்தில், ஒரு இமைப் பொழுவதில் மறுரூபமடைந்து, அவர்களோடு கூட எடுத்துக் கொள்ளப்பட்டு கர்த்தரை ஆகாயத்தில் சந்திப்போம். அப்பொழுது அவருடன் இணைந்து, அவருடைய சமுகத்தை விட்டு இனி ஒருபோதும் பிரியாமல் என்றென்றும் அவரோடிருப்போம். 127 கர்த்தாவே,ஒரே ஆவியினால் இணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்திருப்பது என்ன ஒரு மகத்தான காரியமாய் உள்ளது. ஒரே ஆவி, பரிசுத்த ஆவி, வார்த்தையைத் தன் பிடியில் கொண்டவராய் எங்களுக்குள் வருகிறார். அது என்ன ஒரு மகத்தான காரியமாய் உள்ளது, உலகத்தின் எல்லாக் காரியங்களிலிருந்தும் விடுபட்டு இயேசுகிறிஸ்துவோடு எங்களை இணைத்துக் கொள்வது என்ன ஒரு சிலாக்கியமாயுள்ளது. என்றோ ஒரு நாள் நாங்கள் அவருடைய மகிமையின் சரீரத்துக்கு ஒப்பான ஒரு சரீரத்தைக் கொண்டவர்களாய் அவரைக் கலியாணம் செய்து அவருடன் இணைந்து அந்த மேஜையில் உட்கார்ந்து கலியாண விருந்தில் பங்கு கொள்வோம் என்பதை எண்ணிப்பாக்கும்போது, நாங்கள் மணவாளனும், மணவாட்டியுமாக வரப்போகும் காலங்களினுடாக முடிவற்ற நித்தியத்தினூடாக வாழ்வோம். 128 தேவனாகிய கர்த்தாவே, ஜனங்களுக்கு இது ஒரு கட்டுக் கதையாயில்லாமல், இது அவர்களுக்கு உண்மையுள்ள ஒன்றாக அமைந்து, அவர்கள் பசிதாகம் கொள்ளவும், அவர்கள்... தங்களுடைய செய்தித்தாள்களைப் படிக்கவும், வானொலியில் செய்தியைக் கேட்டு, இது இணையும் நேரம் என்பதைக் காணும்படிச் செய்யும். அடையாளங்கள் விட்டுவிட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. 129 தேவனாகிய கர்த்தாவே, ஸ்திரீகளைக் குறித்து நாங்கள் பேசினது போல, கடைசி நாட்களில் அவர்கள் என்ன செய்வார்கள் என்றும், கடைசி நாட்களில் சபை என்ன செய்யும் என்றும், சபைக் காலங்கள் எப்படியிருக்கும் என்றும், முத்திரைகள் என்னவாயிருக்கும் என்றும், இந்த மற்ற எல்லாக் காரியங்களைக் குறித்தும் பேசினோம். நோவாவின் காலத்தில் எப்படியிருந்தது என்று நாங்கள் பார்த்தோம். சோதோமின் நாட்களில், லோத்தின் நாட்களில் என்ன சம்பவித்தது என்று நாங்கள் பார்த்தோம். அப்பொழுது தேவனுடைய தூதன் தன்னை மானிட சரீரத்தில் வெளிப்படுத்தி, மாட்டிறைச்சியைப் புசித்து, பசுவின் பாலைப் பருகி, அப்பத்தைப் புசித்து, அங்கு நின்று, அவருக்கு பின்னால் என்ன நடந்து கொண்டிருந்தது என்று கூறினார். மனுஷ குமாரனுடைய வருகையிலும் அதேக் காரியம் சம்பவிக்கும் என்று இயேசு கூறினார் . 130 தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் கூர்நுனி கோபுரத்தையும், அது அங்கே எப்படி கட்டப்பட்டுள்ளது என்பதையும் கண்டோம். எப்படியாய் நாங்கள் இந்தக் காரியங்களை கூர்நுனிகோபுரத்தோடு சேர்த்து, நாங்கள் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்பதையும், தலைக்கல்லுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் பார்த்துள்ளோம். தேவனுக்கு மகிமை உண்டாவதாக! பிதாவே, நீர் ஜனங்களை இப்பொழுது வேகமாக விழித்தெழச் செய்து, எங்களை தேவ அன்பிலும், இயேசு கிறிஸ்துவின் பேரிலும் நாங்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் மரியாதையிலும் ஒன்று சேர்க்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். 131 இன்றிரவு இங்கு யாராகிலும் அந்த நம்பிக்கையை உங்களுக்குள் கொண்டிராமலிருந்தால், நீங்கள் உங்கள் கரங்களை தேவனண்டை உயர்த்தி, “தேவனாகிய கர்த்தாவே, என்னை உம்முடன் இணைத்துக் கொள்ளும், உம்மோடு என்னை இணைத்துக் கொள்ளும்” என்று கூறுவீர்களா? சகோதரரே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை, உங்களை, உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆம். “கர்த்தாவே, உம்மோடு என்னை இணைத்துக் கொள்ளும்.” ஆம்! நாடுகள் உடைந்து கொண்டிருக்கின்றன, இஸ்ரவேல் விழித்தெழுந்து கொண்டிருக்கிறாள், 132 அங்கே ஒன்றாக இணைந்துள்ள இஸ்ரவேலரை நோக்கிப் பாருங்கள். இஸ்ரவேலர் உலகம் முழுவதிலுமிருந்து வந்து தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்கள் தங்களை இணைத்துக் கொண்டு இப்பொழுது ஒரு தேசமாக உள்ளனர். அவர்கள் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட தேசமாய் உள்ளனர்; அவர்கள் தங்களுடைய சொந்தக் கொடியோடு, சொந்த பணத்தோடு, சொந்த இராணுவத்தோடு மற்றும் எல்லாவற்றோடும் உள்ளனர். அவர்கள் எப்போதாவது இந்நிலையில் இருந்தார்களானால் அது இப்பொழுதேயாகும். இஸ்ரவேல் ஒன்றிணைந்து விட்டது. ரோமாபுரி இணைந்து விட்டது. சபை இணைந்துவிட்டது. மணவாட்டி இணைந்து கொண்டிருக்கிறாள், ஆமென்; அந்த மகத்தான இணைப்பின் வருகை. அது என்ன? அவையாவும் அந்த அடையாளத்தை நோக்கி, அந்த முக்கிய தலைமையான அடையாளத்தை நோக்கி செல்கின்றன, இயேசுவும் அவருடைய மணவாட்டியும் ஒன்றாக இணைதல். 133 பிதாவாகிய தேவனே, நான் இந்த ஜனங்களுக்காக வேண்டிக்கொள்கிற இந்த ஆசீர்வாதங்களை அருளும். நாங்கள் உம்மோடு இருதயத்திலும் ஆவியிலும் இணைக்கப்பட்டிருப்போமாக, அதை வாஞ்சித்தே அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தியிருக்கிறார்கள். தேவனாகிய கர்த்தாவே, எங்களை சுத்திகரித்து, எங்களை உம்முடையவர்களாக்கிக் கொள்ளும்; கர்த்தாவே, அதை அருளும். நாங்கள் அறிந்ததெல்லாம், நாங்கள் செய்ய முடிந்ததெல்லாம் வேண்டிக்கொள்வதேயாகும். ஆகையால் நாங்கள் அதை வேண்டியிருந்தால், நாங்கள் அதைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள் என்று நீர் கூறினீர்; கர்த்தாவே, நாங்கள் அதற்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்தில் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார், சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே. (ஆமென்.!) இதோ மணவாளன் வருகிறாரே! நான் நடுராத்திரி சத்தத்தைக் கேட்கிறேனே! நாம் யாவரும் உறுதியாய் பற்றிக்கொண்டிருந்தால், நாம் ஆரவார்த்துடன் மேலே சென்று, அவரை ஆகாயத்தில் சந்திப்போம். உங்களுடைய கிரீடத்தை எவரும் எடுத்துக் கொள்ளாதபடி என் சகோதரனே, விழித்திருந்து, ஜெபம் பண்ணுங்கள், ஏனென்றால் வெதுவெதுப்பானவர்களும், பின்வாங்கிப் போனவர்களும் கலியாண வஸ்திரம் தரிக்கமாட்டார்கள். 134 அது உண்மை . நாம் இந்த நள்ளிரவு சத்தத்திற்கு ஆயத்தமாவோமாக. நீங்கள் நினையாத நேரத்தில் அது வரும். ஒரு சத்தம் உண்டாகும், அது அவிசுவாசிக்கின்ற உலகத்தின் மத்தியில் அல்ல; அது ஒரு இரகசியமாயிருக்கும். ஆனால் விசுவாசிகளோ, இதற்காகவே எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறார்கள், நட்சத்திரங்கள் ஒரே வரிசையில் வருகிறதை நீங்கள் காண்கிறீர்களா? புரிகிறதா? அது எதைத் தோன்றச் செய்தது? அது முதன்முறை என்ன செய்ததோ சரியாக அதையேச் செய்கிறது. பாருங்கள், நாம் இங்கிருக்க, அடையாளங்களோ தோன்றிக் கொண்டிருக்கின்றன. அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட வருகையின் அடையாளங்கள் தோன்றுவதைநாம் காண்கிறோம், இதோ, இப்பொழுது அத்திமர இலைகளோ பசுமையாக மாறிவருகின்றன; இராஜ்ஜியத்தின் சுவிசேஷமோ ஒவ்வொரு தேசத்திற்கும் சென்றுவிட்டது; நாம் அருகாமையில் இருக்கிறோம், முடிவையோ காணமுடிகிறது. ஆகையால் மகிழ்ச்சியாய் அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட பிரதியட்சமாகுதலின் செய்தியை நாம் பறைசாற்றுவோம். 135 அது சரியா? ஆசீர்வதிக்கப்பட்ட அவருடைய பிரதியட்சமாகுதலின் செய்தியைப் பறை சாற்றுவோம்! அதைத்தான் நாம் செய்ய வேண்டும். ஒவ்வொருவரிடமும், "ஆயத்தமாகுங்கள், தேவனை சந்திக்க ஆயத்தப்படுங்கள்” என்று சொல்லுங்கள். ஆமென்! நான் அவரை நேசிக்கிறேன். நான் அவரை எவ்வளவாய் நேசிக்கிறேன். இப்பொழுது நாம் எழும்பி நிற்போமாக. நாம் ஒருவருக்கொருவர் வாழ்த்துதல் கூறும்போது, நாம் சுற்றிலும் உள்ள யாருடனாவது கரங்குலுக்கி, இவ்வாறு கூறுவோமாக: நாம் சந்திக்கும் வரை! (இப்பொழுது கரங்களை குலுக்குவோம்) நாம் சந்திக்கும் வரை! நாம் இயேசுவினுடைய பாதத்தில் சந்திக்கும் வரை; நாம்.. வரை ... நினைவிருக்கட்டும், உங்களுக்கு ஒரு அழைப்பு இருக்கலாம். நம்முடைய அடுத்த கூட்டம் அவருடைய பாதத்தண்டை இருக்கலாம்.நாம் மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உங்களோடிருப்பாராக! 136 இப்பொழுது, சற்று சிந்தித்துப் பாருங்கள், நாம் மீண்டும் சந்திப்பதற்கு முன்பு; நாம் ஞாயிறு காலை சந்திப்பதற்கு முன்பு, அல்லது புதன் கிழமை இரவு சந்திப்பதற்கு முன்பு, ஒருகால்... முதலில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது, யாராவது ஒருவர் காணமற்போயிருப்பார். இந்த ஒருவர் காணாமற்போய்விட்டார், அவர்கள் போய்விட்டார்கள். உங்களுடைய கணவன் காணாமற்போய்விட்டார், ஜானுடைய மனைவி காணாமற்போய்விட்டார், இங்குள்ள பிள்ளைகள் காணாமற்போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணும்போது! எல்லாம் நடந்து விட்டது, (என்ன சம்பவித்தது?) அப்பொழுது நீங்கள் கைவிடப்பட்டிருப்பீர்களே! இழக்கப்பட்டவர்களிடம் தங்கள் நிலை கூறப்படும்போது, என்னே அழுகையும் பற்கடிப்புமாயிருக்கும், அவர்கள் மலைகளையும் குன்றுகளையும் பார்த்து கதறினர், (இஸ்ரவேலர் நாடு திரும்பிய பின் ஆலயத்துக்காக கதறுவது போல) அவர்கள் விண்ணப்பம் பண்ணினர், ஆனால் அவர்களுடைய விண்ணப்பங்கள் மிகவும் தாமதமாகிவிட்டிருந்தன். (அவர்கள் செய்தியைபுறக்கணித்து விட்டனர்.) 137 சகோதரனே, அப்படி ஒருபோதும் செய்யாதே, நீ என்ன செய்தாலும், அந்தக் காரணத்திற்காக தீரமாக நில்! ஆம் ஐயா! 138 இப்பொழுது நாம் சந்திக்கும் வரை, நாம் இதைச் செய்வோம். இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல், ஒவ்வொரு கவலைக்கும் கேடயமாக; சோதனைகள் உன்னை சூழும்போது, (நீ என்ன செய்கிறாய்?) அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. விலையேறப்பெற்ற நாமம், எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாமே; விலையேறப்பெற்ற நாமம், எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும்,பரலோகத்தின் சந்தோஷமுமாமே. 139 நாம் மௌனமாக இசைக்கும் போது, நாம் நம்முடைய தலைகளை இப்பொழுது தாழ்த்துவோமாக. இயேசுவின் நாமத்தில் வணங்கி, அவருடைய பாதத்தில் சாஷ்டங்கமாய் விழுந்து, நம்முடைய யாத்திரை முடிவுறும்போது, ராஜாதி ராஜாவாக பரலோகத்தில்...அவருக்கு முடிசூட்டுவோம். (அது என்றாவது ஒரு நாளில் இருக்கும்) விலையேறப்பெற்ற நாமம், விலையேறப்பெற்ற நாமம், எவ்வளவு இனிமையானது! நாம் மீண்டும் சந்திக்கும் வரை, தேவன் உங்களோடிருப்பாராக. பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாமே, விலையேறப் பெற்ற நாமம், எவ்வளவு இனிமையானது; எவ்வளவு இனிமையானது. பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாமே…